இத்தனை கோடி வேனும் கறார் காட்டிய இஷான் கிஷன் – தூக்கி எறிந்த ஐ.பி.எல் அணி (இதெல்லாம் தேவையா?)

Ishan
- Advertisement -

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் 15-ஆவது ஐபிஎல் சீசனானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகளில் 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்கள் அணியில் அதிகபட்சமாக நான்கு பேர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்ற விதிமுறை பிசிசிஐ-யால் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில் மும்பை அணி அவர்களது அணியில் தக்கவைக்கும் 4 வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, பொல்லார்ட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்க வைத்தது. இதன் காரணமாக மும்பை அணியின் முக்கிய வீரர்களான பாண்டியா சகோதரர்கள், இஷான் கிஷன், டிரென்ட் போல்ட், குயின்டன் டி காக் போன்ற முக்கிய வீரர்கள் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் மும்பை அணி 4-வது இடத்திற்காக தக்கவைக்கும் வீரர் குறித்து அதிகமாக யோசித்த வேளையில் சூர்யகுமார் யாதவ் தவிர யாரும் 8 கோடி ரூபாய்க்கு நான்காவது இடத்தில் நீடிக்க விரும்பவில்லை. இதன் காரணமாகவே அணியில் இருந்து ஹார்டிக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள் என்றும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் பெரிய தொகை கிடைக்கததால் வெளியேறியுள்ள ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷன் போன்றோர் மெகா ஏலத்திற்கு முன்பாக நேரடியாக புதிய அணிகளில் தேர்வு செய்யப்பாடுவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக தற்போது ஹார்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ishan

ஆனால் மற்றொரு வீரரான இஷான் கிஷனை அவர்கள் பெரிய தொகைக்கு அணுகவில்லை என்றும் ஏழு கோடி ரூபாய் மட்டுமே தரமுடியும் என அகமதாபாத் அணி தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் அந்த டீலுக்கு முன்வராத இஷான் கிஷன் 10 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்தால் மட்டுமே அகமதாபாத் அணிக்காக விளையாட முடியும் என்று தெரிவித்து விட்டார் என்றும் அதன் காரணமாக அவரை நிராகரித்த அகமதாபாத் அணியானது கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அதேபோன்று அகமதாபாத் அணியால் தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு வீரராக ரஷீத் கான் 11 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அகமதாபாத் அணியிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வேண்டும் என கண்டிஷன் போட்ட இஷான் கிஷன் அவர்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதனால் தற்போது மெகா ஏலத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : அஹமதாபாத் அணி செலக்ட் செய்துள்ள 3 வீரர்கள் இதோ! யார்யார் – எவ்வளவு கோடிகள் தெரியுமா?

ஒருவேளை ஏலத்தில் அவரை பெரிய தொகைக்கு யாரும் ஏலம் எடுக்க முன்வராமல் போகும் பட்சத்தில் இது அவருக்கு இழப்பு என்றே கூறலாம். ஆனாலும் இஷான் கிஷன் ஒரு இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரர் என்பதனால் அவருக்கு தனி மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement