ஐபிஎல் 2022 : அஹமதாபாத் அணி செலக்ட் செய்துள்ள 3 வீரர்கள் இதோ! யார்யார் – எவ்வளவு கோடிகள் தெரியுமா?

Rashid
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட 2 புதிய அணிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக மும்பை, சென்னை உள்ளிட்ட இந்த தொடரில் ஏற்கனவே விளையாடி வரும் பழைய 8 அணிகளும் தாங்கள் விரும்பிய முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொண்டு அவர்களின் பெயர் பட்டியலையும், அவர்களுக்கு எத்தனை கோடிகளை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளது என்பது போன்ற விவரங்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

ipl

- Advertisement -

அஹமதாபாத்:
மேலும் இந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக தாங்கள் விரும்பும் 3 வீரர்களை அதிகபட்சமாக தேர்வு செய்துக்கொள்ள புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகளுக்கு ஐபிஎல் நிர்வாகம் முன்னுரிமை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் ஒரு தரமான அணியை உருவாக்க மிகவும் உலகத்தரம் வாய்ந்த 3 வீரர்களை தேர்வு செய்ய அகமதாபாத் அணி நிர்வாகம் கடந்த ஒரு மாதமாகவே முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.

3 வீரர்கள்:
இந்நிலையில் அஹமதாபாத் அணி விரும்பி தேர்வு செய்துள்ள 3 வீரர்கள் பற்றிய விவரங்கள் நேற்று இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் வெளியாகின. அதில் இந்தியாவைச் சேர்ந்த அதிரடி நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை அகமதாபாத் அணி நிர்வாகம் முதல் வீரராக தேர்வு செய்துள்ளது. அத்துடன் வளர்ந்து வரும் இளம் இந்திய வீரராக அறியப்படும் சுப்மன் கில் அந்த அணி தேர்வு செய்துள்ள 2வது இந்திய வீரர் ஆவார். வெளிநாட்டு வீரர் வகையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக பல சாதனைகள் படைத்து வரும் ரசித் கானை அகமதாபாத் வாங்கியுள்ளது.

Pandya

1.கேப்டன் ஹர்டிக் பாண்டியா : இதில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் நட்சத்திர வீரர் என்பதாலும் ஐபிஎல் 2022 சீசனுக்கு தங்கள் அணியின் கேப்டனாக அகமதாபாத் அணி நிர்வாகம் நியமித்துள்ளதாக தெரிகிறது. இவருக்கு ஏலத்தில் அதிகபட்ச தொகையாக 15 கோடி ரூபாய்களை அந்த அணி நிர்வாகம் கொடுக்க உள்ளது.

- Advertisement -

2.ரஷீத் கான்: கடந்த சீசன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 டி20 சுழல் பந்து வீச்சாளராக விளங்கும் ரஷித் கான் ரூபாய் 11 கோடிகளுக்கு அகமதாபாத் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரைத் தேர்வு செய்துள்ளதால் ஆரம்பத்திலேயே அகமதாபாத் அணியின் பந்துவீச்சு பலமாகி உள்ளது என்றே கூறலாம்.

gill

3.சுப்மன் கில் : இந்தியாவை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரரான சுப்மன் கில் வரும் ஐபிஎல் 2022 சீசனில் ரூபாய் 7 கோடிகளுக்கு அகமதாபாத் அணிக்காக விளையாட உள்ளார். இவர் ஏற்கனவே கொல்கத்தா அணிக்கு மிகவும் சிறப்பாக விளையாடி “வளர்ந்து வரும் வீரர்” என்ற விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் ஒருநாள் போட்டி : நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் 2022 சீசனில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய்களை வீரர்களை தேர்வு செய்ய செலவு செய்யலாம் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில் அகமதாபாத் அணி நிர்வாகம் இந்த 3 வீரர்களை தேர்வு செய்ய 33 கோடிகளை செலவு செய்து விட்டதால் தற்போது அந்த அணியிடம் 57 கோடி ரூபாய் மீதியுள்ளது.

Advertisement