முதல் ஒருநாள் போட்டி : நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Rahul-1
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தின் முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜனவரி 19ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தென்ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது.

INDvsRSA

- Advertisement -

புதிய கேப்டன்:
இந்த போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி ஏற்கனவே அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டு அது ரோகித் ஷர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அவர் காயம் காரணமாக விலகியதை அடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக கேஎல் ராகுல் செயல்பட உள்ளார்.

துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா விளையாட உள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியதால் கேஎல் ராகுல் தலைமையில் இந்த ஒருநாள் தொடரில் கோலி விளையாட உள்ளார்.

rahul 2

கேஎல் ராகுல் படை:
கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்தியா பங்கேற்றது. அதில் மிகவும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 5 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்து ஒருநாள் தொடரை வென்று சரித்திர சாதனையும் படைத்தது. அந்த வரிசையில் இந்த முறை கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய படை வெற்றி பெறுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

உத்தேச அணி:
சரி இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களமிறங்க உள்ள உத்தேச இந்திய அணியை பற்றி விவாதிப்போம்:

Dhawan

தொடக்க வீரர்கள்:

- Advertisement -

இந்த போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். கேஎல் ராகுல் இடம் பற்றி எந்த கேள்வியும் இல்லாத நிலையில் மற்றொரு தொடக்க வீரராக அனுபவம் வாய்ந்த ஷிகர் தவானுக்கு இந்த தொடரில் கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் சொதப்பும் பட்சத்தில் அடுத்து வரும் போட்டிகளில் 2021 ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே ஆகிய கோப்பைகளில் பட்டையை கிளப்பிய இளம் வீரர் “ருதுராஜ் கைக்வாட்” அவரின் இடத்தில் களமிறக்கப்படுவார் என நம்பலாம்.

மிடில் ஆர்டர்:
3வது இடத்தில் எந்த வித கேள்வியும் இல்லாமல் விராட் கோலியும் 4வது இடத்தில் சூரியகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்குவார்கள் என நம்பலாம். 5வது இடத்தில் மற்றொரு வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர வீரராக அறியப்படும் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். 6வது இடத்தில் வழக்கமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடுவார். 7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இல்லாத காரணத்தால் ஒரு ஆல்ரவுண்டர் விளையாடுவதையே இந்திய அணி நிர்வாகம் விரும்பும் என கருதலாம்.

- Advertisement -

Venkatesh-iyer

அப்படிப்பார்த்தால் கடந்த வருடம் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் பட்டையை கிளப்பிய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இவர் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் அறிமுகமாக களமிறங்கி அசத்தினார்.

அதேசமயம் 2 சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை என இந்தியா கருதினால் விடாமுயற்சியுடன் போராடி இந்திய வெள்ளைப்பந்து அணிக்கு திரும்பியுள்ள தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இடத்தில் விளையாடவும் வாய்ப்புள்ளது.

bhuvi 1

பவுலர்கள்:
சுழல் பந்து வீச்சாளராக யூஸ்வென்ற சஹால் விளையாடுவார் என நம்பலாம். வேகப்பந்து வீச்சாளர்களாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பவுலிங் ஆல்ரவுண்டர் தேவை எனக் கருதினால் ஷார்துல் தாக்கூர் களமிறங்கலாம்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ள உத்தேச 11 பேர் இந்திய அணி இதோ:

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தா அதுக்கும் நான் ரெடி – பும்ரா அதிரடி முடிவு

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கீப்பர்), வெங்கடேஷ் ஐயர் (அல்லது) ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வென்ற சஹால், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சஹர் (அல்லது) ஷார்துல் தாகூர்.

Advertisement