பி.சி.சி.ஐ எனக்கு அந்த வாய்ப்பு கொடுத்தா அதுக்கும் நான் ரெடி – பும்ரா அதிரடி முடிவு

Bumrah
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 19-(நாளை) முதல் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனான வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அளித்த பேட்டியில் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதை முன்கூட்டியே வீரர்களின் கூட்டத்தில் தெரிவித்தார். இருப்பினும் அது அவருடைய தனிப்பட்ட முடிவு என்பதால் நாங்கள் அதனை மதிக்கிறோம்.

Bumrah

இந்திய அணிக்காக விராட் கோலி செய்த பங்களிப்பு என்பது அளப்பரியா ஒன்று. இனியும் அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்கினை அளிக்க இருக்கிறார். அதனால் அவர் எடுத்த அந்த தனிப்பட்ட முடிவிற்கு வாழ்த்துக்களை மட்டுமே என்னால் தெரிவிக்க முடியும். அவரது முடிவு சரியா? தவறா? என்று என்னால் கருத்து கூற முடியாது என்று கூறினார். மேலும் அவரது தலைமையின் கீழ் நான் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகி இருந்தாலும் நிச்சயம் தொடர்ந்து இந்திய அணிக்காக மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார் என்றும் கூறினார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இனி வருங்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன்சி செய்யும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் அதை மிகப் பெரிய கௌரவமாக ஏற்று கண்டிப்பாக கேப்டனாக செயல்படுவேன். ஏனெனில் எந்த ஒரு வீரரும் அணியின் கேப்டன் பதவியை வேண்டாம் என்று சொல்லமாட்டார்கள். அதில் நானும் மாறுபட்டவன் கிடையாது எனவே பிசிசிஐ எனக்கு கேப்டன்சி வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் நான் நிச்சயம் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தயார் என்று கூறினார்.

Bumrah-1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணிக்காக என்னால் முடிந்த பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன். தற்போது ஒருநாள் துணை கேப்டனாக இருப்பதனால் எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. வழக்கம்போல் எனது பணியில் நான் சிறப்பாக செயல்பட காத்துக்கொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி இந்த ஒருநாள் தொடரில் கேப்டன் ராகுலுடன் ஆலோசனைகளை பகிர்வதும், பவுலர்களின் மனநிலையை அவருக்கு எடுத்து வைப்பதும், பீல்டிங் அமைப்பை சற்று சரி பார்ப்பது என சில பணிகளை நான் செய்ய இருக்கிறேன்.

இதையும் படிங்க : மும்பை டீம்ல ஆடியிருந்தும் டெஸ்ட் போட்டியில் இப்படி சண்டை போட இதுவே காரணம் – பும்ரா குறித்து யான்சென்

எப்போதுமே அணியின் வெற்றியில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி என்னுடைய முழு சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த விரும்பும் நான். அந்த வகையில் இந்த ஒருநாள் தொடரிலும் அணியை முன்கொண்டு செல்ல என்னால் முடிந்தவற்றை செய்ய தயாராக இருப்பதாக பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement