மும்பை டீம்ல ஆடியிருந்தும் டெஸ்ட் போட்டியில் இப்படி சண்டை போட இதுவே காரணம் – பும்ரா குறித்து யான்சென்

Jansen
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரானது பரபரப்புக்கு சற்றும் குறைவில்லாமல் சென்றது. குறிப்பாக வீரர்களிடையே மோதல், வார்தைப்போர், ஸ்லெட்ஜிங் என அனல் பறந்தது. அந்த வகையில் 2-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கும், தென்ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ யான்செனுக்கும் இடையே சில ஆவேசமான வார்த்தை மோதல் நடைபெற்றது.

bumrah

அந்த குறிப்பிட்ட 2-வது டெஸ்ட் போட்டியின் போது யான்சென் பும்ராவிற்கு எதிராக தொடர்ச்சியாக பவுன்சராக வீசினார். அதனால் ஆவேசப்பட்ட பும்ரா இளம் வீரரான மார்கோ யான்செனை நோக்கி சில வார்த்தைகளை உதித்தார். பதிலுக்கு அவரும் சில கோபமான பதில்களை வெளிப்படுத்தினார். இதில் வேடிக்கையான விடயம் யாதெனில் இவர்கள் இருவருமே கடந்த ஆண்டு மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஒரே அணியில் விளையாடியவர்கள்.

- Advertisement -

அவர்களுக்கிடையே வார்த்தை மோதல் முற்ற களத்தில் இருந்த அம்பயர் அவர்களை விலக்கி வைத்தார். இந்நிலையில் இப்படி தான் பும்ராவுடன் சண்டை இட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தற்போது யான்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பும்ராவுடன் நான் மும்பை அணியில் விளையாடி உள்ளேன். அவருடன் இணைந்து நிறைய பயிற்சிகளை செய்துள்ளேன். இதுபோன்று சற்று ஆவேசமான வார்த்தைகளை உதிர்த்து சற்று வருத்தம் தான்.

Jansen

இருப்பினும் சொந்த நாட்டு அணிக்காக விளையாடும் போது சில முறை இதே போன்று நம் சக வீரர்களுடன் சில வார்த்தைகளை உதிர்க்க நேரிடும். அந்த வகையில் தான் நான் பும்ராவுடன் வார்த்தை போரில் ஈடுபட்டேன். அதேபோன்றுதான் பும்ராவும் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்பதனால் என் மீது கோபப்பட்டார். நாங்கள் இருவரும் எங்களது நாட்டு அணிக்காக விளையாடுகிறோம். அதற்காக இதுபோன்ற சில மோதல்கள் ஒன்றும் தவறு கிடையாது.

இதையும் படிங்க : விராட் கோலி தனது ஈகோவை விட்டு தரவேண்டும் – கபில்தேவ் கொடுத்த அறிவுரை – என்ன நடந்தது?

கிரிக்கெட்டை மிகவும் விரும்பி விளையாடுகிறோம். எனவே இது போன்று சில சமயம் நடக்கத்தான் செய்யும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான மார்கோ யான்சென் சிறப்பாக பந்து வீசி கொத்து கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதனால் அவருக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement