விராட் கோலி தனது ஈகோவை விட்டு தரவேண்டும் – கபில்தேவ் கொடுத்த அறிவுரை – என்ன நடந்தது?

Kapildev
- Advertisement -

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரம் மற்றும் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்கும் இந்தியா கடந்த 2014ஆம் ஆண்டு 7வது இடத்தில் திண்டாடிய போது பல அதிரடி மாற்றங்கள் மற்றும் ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் காரணமாக நம்பர் ஒன் இடத்துக்கு அவர் கொண்டு வந்தார்.அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற ஆசியக் கண்டத்திற்கு வெளியே பல சரித்திர வெற்றிகளை பெற்றுத்தந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக சாதனையும் படைத்துள்ளார்.

kohli

- Advertisement -

விமர்சனம், சர்ச்சை:
கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த இவர் ஒரு ஐசிசி உலக கோப்பையை கூட வெல்ல முடியாத காரணத்தால் கடந்த பல வருடங்களாகவே விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார். இதனால் அந்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டும் எண்ணம் முதலில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரின் ஒருநாள் கேப்டன் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்தது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

சாதாரண வீரர்:
பேட்ஸ்மேனாக மலை போல ரன்கள் கேப்டனாக வரலாற்று வெற்றிகள் என ஏற்கனவே தன்னை ஒரு ஜாம்பவனாக நிரூபித்துள்ள விராட் கோலி இனி இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாடப் போகிறார். இந்நிலையில் விராட் கோலியின் திடீர் கேப்டன்ஷிப் முடிவு மற்றும் இனி அவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி இன்று அவர் அளித்துள்ள பேட்டியில்,

kohli

“வரலாற்றில் எனக்கு கீழ் சுனில் கவாஸ்கர் விளையாடி உள்ளார். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோருக்கு கீழ் நான் விளையாடி உள்ளேன். ஆனால் எனக்கு எப்போதும் ஈகோ இருந்தது கிடையாது. அதுபோல விராட் கோலி தற்போது தனது ஈகோவை தூக்கி வைத்து விட்டு ஒரு இளம் வீரருக்கு கீழே விளையாட வேண்டும். அது அவருக்கு நன்மையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டுக்கும் நன்மை செய்யும்.

- Advertisement -

அடுத்ததாக பொறுப்பேற்க உள்ள புதிய கேப்டனுக்கும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் விராட் கோலி உதவ வேண்டும். ஏனெனில் விராட் கோலி போன்ற ஒரு பேட்ஸ்மேனை இழக்க முடியாது”என தெரிவித்த கபில் தேவ் தாம் ஒரு அனுபவ வீரர் என்பதை மறந்துவிட்டு புதிதாக யார் பொறுப்பை ஏற்றாலும் அந்த இளம் கேப்டனுக்கு கீழே விராட் கோலி விளையாட வேண்டும் என அறிவுரை வழங்கினார். அத்துடன் விராட் கோலி போன்ற இவ்வளவு அனுபவம் உள்ள ஒருவர் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு உதவி செய்து இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Kohli

அடுத்த கேப்டன் யார் :
ஏற்கனவே இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதால் இனி அவர் தலைமையில் விராட் கோலி விளையாட உள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது நிலவி வருகிறது.
டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக பெரும்பாலும் ரோகித் சர்மா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : காயத்திலிருந்து மீண்ட அவர் ஒருநாள் போட்டியில் விளையாட ரெடியா இருக்காரு – பும்ரா கொடுத்த அப்டேட்

இருப்பினும் கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் பெயரும் அடுத்த கேப்டன் பட்டியலில் உள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அவரின் கீழ் எந்தவித தயக்கமுமின்றி விராட் கோலி விளையாட வேண்டும் என கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

Advertisement