காயத்திலிருந்து மீண்ட அவர் ஒருநாள் போட்டியில் விளையாட ரெடியா இருக்காரு – பும்ரா கொடுத்த அப்டேட்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே பார்க் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

kohli

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது. ஏனெனில் புதிய கேப்டனாக கே.எல் ராகுல் செயல்பட இருப்பதால் அவரின் தலைமையில் இந்திய அணி எவ்வாறு இருக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் கம்பேக் கொடுக்கவுள்ளதாக இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட சிராஜ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை.

siraj

இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் அவரது உடற்தகுதி குறித்து பேசிய பும்ரா கூறுகையில் : சிராஜ் தற்போது பந்துவீசும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பயிற்சியிலும் அவர் எந்தவித பிரச்சனையுமின்றி பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி இப்படி அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து வெளியேற இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

எனவே நிச்சயம் இந்த ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவார் என நினைப்பதாக பும்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி உள்ள சிராஜ் நிச்சயம் இந்த தொடரில் இடம் பிடித்து விளையாடுவார் என்று தெரிகிறது.

Advertisement