விராட் கோலி இப்படி அடுத்தடுத்து கேப்டன் பதவியில் இருந்து வெளியேற இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்திய அணியின் அசைக்கமுடியாத கேப்டனாக திகழ்ந்து வந்த விராத் கோலிக்கு கடந்த சில மாதங்களாகவே நேரம் சரியில்லை என்றே கூறலாம். ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி அடுத்ததாக டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தேர்வு செய்யப்பட்டபோது பி.சி.சி.ஐ மூலமாக ஒருநாள் தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டார்.

- Advertisement -

தற்போது நடைபெற்று முடிந்துள்ள டெஸ்ட் தொடருக்கு பிறகு தானாக முன்வந்து டெஸ்ட் கேப்டன் பதவியையும் அவர் துறந்துள்ளார். இப்படி அடுத்தடுத்து அனைத்து கேப்டன் பதவிகளிலும் இருந்து வெளியேறிய விராட் கோலியின் இந்த விலகல் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலியின் இந்த விலகல் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விராத் கோலியின் வாழ்வில் நடந்துவிட்டது. முதலில் ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாக அவர் நீக்கப்பட்டார்.

Sanjay

அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் விலகியதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி சிறிய இடைவெளியில் கோலி அனைத்து கேப்டன் பதவியில் இருந்தும் வெளியேறுவதற்கு முக்கிய காரணம் யாதெனில் : இந்திய கிரிக்கெட் அணியில் யாரும் நீக்க முடியாத ஒரு அசைக்க முடியாத கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் தொடருக்கான ஆலோசனைகளை வழங்கிய கேப்டன் ராகுல் – கூட்டத்தில் ஒருவராக விராட் கோலி

அதனால் பிசிசிஐ அவரை நீக்கும் முன்னர் அவராகவே தானாக முன்வந்து டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை வழங்கி ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்கிக்கொள்ளும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது கோலியின் விஷயத்திலும் வாய் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement