ஒருநாள் தொடருக்கான ஆலோசனைகளை வழங்கிய கேப்டன் ராகுல் – கூட்டத்தில் ஒருவராக விராட் கோலி

Rahul
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணியானது அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

venky

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதால் புதிய ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே கே.எல் ராகுல் தலைமையில் இந்திய அணி ஒருநாள் தொடரை முதல் முறையாக எதிர்கொள்ள இருக்கிறது.

அன்மையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய விராட் கோலி முழுநேர பேட்ஸ்மேனாக நீண்ட ஆண்டுகள் கழித்து விளையாடுகிறார். இந்த தொடருக்கு முன்னதாக தற்போது போலன்ட் பார்க் மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

kohli

dravid

அப்படி பயிற்சியில் ஈடுபடும் போது பயிற்சிக்கு முன்பாக அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் வீரர்களிடையே சில ஆலோசனைகளை வழங்குவதும் அவர்களுக்கு மத்தியில் உரையாற்றுவதும் வழக்கம். அந்த வகையில் இந்திய அணி வீரர்களை சுற்றி நிற்க வைத்து கேப்டன் ராகுல் மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் பேசினார்கள். அந்த உரையாடலின் போது சக வீரர்கள் மத்தியில் கூட்டத்தில் ஒருவராக விராட் கோலி நின்று அதனை கேட்டுக்கொண்டிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் சீரிஸ் மாதிரி ஒருநாள் தொடரிலும் இந்தியாவை மண்ணை கவ்வ வைக்க செய்வோம் – தெ.ஆ வீரர் சவால்

இது தொடர்பான புகைப்படங்களை தற்போது பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வேளையில் விராட் கோலிக்கு இப்படி ஒரு நிலையா? என்று ரசிகர்கள் அனைவரும் சற்று மன வருத்தத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.

Advertisement