இப்படி ஒரு சூழ்நிலையில் சதமடித்தது நீங்க மட்டும் தான். பட்டிதாரை மனதார பாராட்டிய – விராட் கோலி

patidar 2
Advertisement

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதி பெற்ற அணிகளாக குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் தேர்வாகினர். இதில் முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து நேற்று மும்பை ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் அணியானது இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

Mohammed Siraj De Kock

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி ரஜத் பட்டிதாரின் சிறப்பான சதம் காரணமாக மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்கியது. 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்களை அடித்த பெங்களூரு அணியில் ரஜத் பட்டிதார் மட்டும் 112 ரன்களை விளாசி அசத்தினார். அதோடு இறுதி நேரத்தில் அவரோடு கைகோர்த்து தினேஷ் கார்த்திக் 37 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியால் 193 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ரஜத் பட்டிதாரை பலரும் பாராட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி அவரது ஆட்டம் குறித்து மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார்.

Rajat Patidar 112 2

இதுகுறித்து அவர் கூறுகையில் : எலிமினேட்டர் ஆட்டத்தில் இது போன்ற ஒரு இன்னிங்ஸ் மிகச் சிறப்பான ஒன்று. அதிலும் குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்காத ஒரு வீரர் எலிமினேட்டர் போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி முக்கியமான இந்த நாக் அவுட் போட்டியில் சதம் அடித்தது பட்டிதார் மட்டும்தான் என நினைக்கிறேன்.

- Advertisement -

நான் இந்த போட்டியில் அவரது பேட்டிங் முடிந்தபின்னர் சில பாராட்டுக்களை அவரிடம் தெரிவித்தேன். அதில் நெருக்கடியான காலகட்டத்தில் ஆடப்பட்ட பல இன்னிங்ஸ்களை பார்த்திருக்கும் நான் உங்களது இன்னிங்சை போல் ஒரு ஆட்டத்தை பார்த்ததே இல்லை என்று அவரிடம் தெரிவித்திருந்தேன்.

இதையும் படிங்க : எங்க டீமோட ஸ்பெஷல் பிளேயரே இவர்தான். அவரு மேட்சையே மாத்திடுவாரு – பவுலரை பாராட்டிய கேப்டன்

மேலும் அதிக நெருக்கடியில் மிகப்பெரிய போட்டி ஒன்றில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வீரர் இப்படி சிறப்பாக ஆடி சாதித்துள்ளது அவர் மட்டும்தான். அவருடைய இந்த இன்னிங்ஸ் எப்போதும் மறக்க முடியாத ஒன்று. இன்னும் இந்த தொடர் முடிவடைய 2 போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கொண்டாட்டத்திற்காக நாங்கள் தயாராக இருக்கிறோம் என விராட் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement