எங்க டீமோட ஸ்பெஷல் பிளேயரே இவர்தான். அவரு மேட்சையே மாத்திடுவாரு – பவுலரை பாராட்டிய கேப்டன்

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்திருந்த லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடும் வாய்ப்பிற்காக மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும் என்பதனால் இந்த போட்டி ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. அதே வேளையில் ரசிகர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேற போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த போட்டிக்காக காத்திருந்தனர்.

Rajat Patidar 112 2

- Advertisement -

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கே.எல் ராகுல் தலைமையிலான அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை ஒரு முறையாவது ஜெயித்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் பெங்களூரு அணியானது இம்முறையும் இறுதிக்கட்டம் வரை முன்னேறியுள்ளது.

அடுத்ததாக நடைபெறவிருக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிட்டால் இறுதிப் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும். கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு சரியான அணி செட்டாகி உள்ளதாலும் டு பிளேசிஸ் தலைமையில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் இம்முறை பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Harshal Patel vs LSG

இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை வீழ்த்திய பின்னர் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேசிஸ் தங்களது அணி வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் அவர் ஹர்ஷல் படேல் குறித்து சில விமர்சையான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எங்களது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகவும் அமைதியாகவும், சுதந்திரமாகவும் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அதனால் எங்களால் பெரிய போட்டிகளில் கூட இம்முறை சிறப்பாக விளையாட முடிகிறது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் எங்கள் அணியில் ஒரு என்டர்டெயினராக உள்ளார். அவர் எங்களது அணியில் ஸ்பெஷல் கார்டு. எப்போது அவரை பந்துவீச அழைத்தாலும் அவர் தனது பணியை சிறப்பாக செய்கிறார்.

இதையும் படிங்க : பெங்களூரு அணி அந்த 3 பேரை மட்டும் நம்பியில்லை. அவங்க ஸ்ட்ராங் தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

அதேபோன்று இந்த தொடரில் முக்கியமான ஓவர்களை அவர் வீச வரும் பொழுது மிகுந்த நம்பிக்கையுடன் வீசுகிறார். மேலும் இந்த போட்டியில் அவருடைய ஒரு ஓவர்தான் போட்டியின் முடிவை மாற்றியது. எங்கள் அணியின் மிகப்பெரிய சொத்து அவர் என்று டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement