பெங்களூரு அணி அந்த 3 பேரை மட்டும் நம்பியில்லை. அவங்க ஸ்ட்ராங் தான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளாக குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் முன்னேறிய வேளையில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Miller 2

- Advertisement -

அதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் லக்னோ அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணியானது தற்போது ராஜஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடவுள்ளது. அந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது ரஜத் பட்டிதார்-இன் சிறப்பான ஆட்டம் காரணமாக பெங்களூரு அணி 207 ரன்களை குவித்தது.

பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியால் 20 ஓவர்களின் முடிவில் 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி லக்னோ அணியை வீழ்த்தி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.

Rajat Patidar 112

எனவே ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். இந்நிலையில் பெங்களூரு அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ் ஆட்டமிழந்தது அதிர்ச்சியாக இருந்தது

- Advertisement -

அதே போன்று கோலியும் பந்துகளுக்கு இணையான ரன்களையே குவித்தார். அதேபோன்று மேக்ஸ்வெல்லும் இம்முறை ஒற்றை இலக்கில் வெளியேறினார். இருப்பினும் அந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது அற்புதமான ஒன்று. இதன் மூலம் பெங்களூரு அணியானது தற்போது அந்த மூன்று முக்கிய வீரர்களை மட்டுமே சார்ந்தது கிடையாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஒவ்வொரு போட்டியின் போதும் பெங்களூரு அணி புதிய புதிய ஹீரோக்களை கண்டுபிடிக்கும் திறன் உடையது.

இதையும் படிங்க : உங்களின் கேவலமான திட்டமே தோல்விக்கு காரணம் – லக்னோவை விமர்சித்த முன்னாள் வீரர்

இந்த சீசனிலும் அந்த வகையில் சில அற்புதமான வீரர்கள் பெங்களூர் அணியில் உள்ளனர். நிச்சயம் இந்த ஆண்டு பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாக உள்ளது. அதே போன்று டெத் ஓவர்களில் பெங்களூரு அணி அற்புதமாக பந்து வீசி வருகிறது என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement