உங்களின் கேவலமான திட்டமே தோல்விக்கு காரணம் – லக்னோவை விமர்சித்த முன்னாள் வீரர்

KL Rahul LSG Quinton De Kock vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப் பட்டியலில் 4-வது இடம் பிடித்த பெங்களூருவிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 3-வது இடம் பிடித்த லக்னோ தொடரிலிருந்து வெளியேறியது. ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 207/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் ஆகிய நட்சத்திரங்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் மறுபுறம் நங்கூரமாக பயமறியாத காளையாக சரவெடி பேட்டிங் செய்த இளம் வீரர் ரஜத் படிதார் 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

Rajat Patidar 112 2

- Advertisement -

அதனால் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாறு படைத்த அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 37* (23) ரன்கள் குவித்து அதிரடி பினிஷிங் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 208 என்ற இலக்கை துரத்திய லக்னோவுக்கு குயின்டன் டி காக் 6 (5) மன்னன் வோஹ்ரா 19 (11) என டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 41/2 என திணறிய அந்த அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக போராடினார்.

சொதப்பிய லக்னோ:
இதில் தீபக் ஹூடா 45 (26) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 9 (9) ரன்களில் அவுட்டானார். அந்த பரபரப்பான தருணத்தில் பினிஷிங் செய்ய வேண்டிய கேஎல் ராகுல் 79 (58) ரன்களில் அவுட்டானதாலும் அடுத்து வந்த க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட்டானதாலும் 20 ஓவர்களில் 193/6 ரன்களை மட்டுமே எடுத்த லக்னோ பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியால் மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோதுவதற்கு பெங்களூரு தகுதி பெற்றது.

lewis

முன்னதாக இப்போட்டியில் 208 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தும் போது முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் முக்கியமான 3-வது இடத்தில் மன்னன் வோஹ்ரா களமிறங்கியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது. ஏனெனில் கடைசி நேரத்தில் பினிஷிங் செய்வதற்கு ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா ஆகிய 2 அதிரடி வீரர்கள் இருக்கும் நிலையில் பெரும்பாலான போட்டிகளில் டாப் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய அனுபவம் கொண்ட வெஸ்ட்இண்டீஸ் அதிரடி வீரர் எவின் லீவிசை அந்த அணி நிர்வாகம் 6-வது இடத்தில் களமிறக்கியது பெரிய கேள்விகளை எழுப்பியது.

- Advertisement -

கேவலமான திட்டம்:
அந்த நிலைமையில் 3-வது இடத்தில் களமிறங்கிய மன்னன் ஓவரா அதிரடியாக 19 (11) ரன்கள் எடுத்தாலும் திடீரென ஆட்டமிழந்த நிலையில் கடைசி ஓவரில் களமிறங்கிய லெவிஸ் 24 ரன்கள் தேவைப்பட்ட போது 2* (6) ரன்கள் எடுத்து செட்டாவதற்கு முன்பே போட்டி முடிந்து போனது. இந்நிலையில் லக்னோவின் இந்த தோல்விக்கு எவின் லெவிஸ் கீழே இறக்கப்பட்ட மோசமான திட்டமே முக்கிய காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

chopra

இதுபற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏற்கனவே பெங்களூருவுக்கு எதிராக குயின்டன் டி காக் சிரமப்படுகிறார் என்று சொல்லியிருந்தோம். ஹேசல்வுட் பந்தில் அவுட்டாவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் 3-வது இடத்தில் மன்னன் வோஹ்ரா வந்தது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. என்ன பொறுத்த வரை இந்த திட்டம் எனக்கு பிடிக்கவில்லை. 3-வது இடத்தில் எவின் லெவிஸ் ஏன் வரவில்லை என்று நான் நினைத்தேன்.

- Advertisement -

அவர் அந்த இடத்தில் விளையாடவில்லையெனில் எதற்காக அந்த அணியில் அவர் விளையாடுகிறார். ஒருவேளை மேக்ஸ்வெல் பந்து வீசுவார் என்பதற்காக பிடித்து வைத்தார்களா? வோஹ்ராவும் நல்ல 19 ரன்கள் அடித்தாலும் எவின் லெவிஸ் பேட்டிங் ஆர்டரில் மிகவும் லேட்டாகவே வந்தார்” என கூறினார்.

Harshal Patel vs LSG

மெதுவான ராகுல்:
இப்போட்டியில் கேஎல் ராகுல் மெதுவாக விளையாடியதும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் ரசிகர்கள் கூறுகின்றனர். அதுபற்றி ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “தொடக்கத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த கேஎல் ராகுல் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக ரொம்பவே மெதுவாக ஆடினார். தீபக் ஹூடா அதிரடி வேகத்தில் பேட்டிங் செய்து சிறப்பாக செயல்பட்டார்”

இதையும் படிங்க : ஆபத்தில் தங்கமாய் இருக்காரு ! வலியுடன் ஆர்சிபி வெற்றிக்கு பங்காற்றிய இந்திய பவுலரை பாராட்டும் டு பிளேஸிஸ்

“இந்த தொடரில் லக்னோவின் சிறந்த கண்டுபிடிப்பு அவர்தான். அதனால் ராகுலுக்கு நல்ல சுதந்திரம் கிடைத்த போதிலும் அதை தவற விட்டார். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களை வெளுக்கும் ராகுல் சுழல் பந்துவீச்சாளர்களிடம் தடுமாறுகிறார். லக்னோ சேசிங் திட்டத்தை சரியாக வகுத்தார்களா? என்னை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டரை திட்டமிடாததே தோல்விக்கான காரணம்” என்று பேசினார்.

Advertisement