பிளான் பண்ணதை விட 45 நிமிடங்கள் கூடுதலாக பிராக்டீஸ் பண்ண விராட் கோலி – எதற்கு தெரியுமா?

Virat-Kohli
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் துவங்கியுள்ள 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் நேற்று சென்னை வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் கேப்டன்ஸ் மீட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று அகமதாபாத் சென்று தற்போது இன்று மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வெளியில் இருந்து வரும் யாருக்கும் அனுமதி கிடையாது என்று மூடிய மைதானத்தில் இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி திட்டமிட்டதை விடவும் கூடுதலாக 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் விராட் கோலி இந்த உலக கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் விராட் கோலி கூடுதலான வலைப்பயிற்சியில் ஈடுபட்டது ஏன்? என்ற காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. ஆனால் இரண்டு போட்டியுமே மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் இந்திய அணியால் பயிற்சி போட்டியில் விளையாட முடியவில்லை.

இதையும் படிங்க : ENG vs NZ CWC 2023 : முதல் போட்டியிலேயே பறந்த இந்தியாவின் மானம்.. பிசிசிஐ’க்கு கம்பீர் கேள்வி.. நடந்தது என்ன?

இதன் காரணமாகவே திட்டமிட்டத்தை விட இன்று கூடுதல் நேரம் செலவிட்டு விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று மற்ற இந்திய வீரர்களும் அனைத்து வகையான பயிற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டதாகவும், எதிர்வரும் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தி முதல் போட்டியிலே வெற்றி பெற வேண்டும் என்பதை அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement