அவர் மட்டும் தான் டீமுக்காக ஆடுறாரு.. ஆனா விராட் கோலி பக்கா ஃசெல்பிஷ்.. ஹபீஸ் தடாலடி விமர்சனம்

Mohammed Hafeez 2
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வருகிறது. அதனால் 2011 போல கோப்பையை வெல்லாமல் ஓய மாட்டோம் என்பதை காட்டி வரும் இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளை தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது.

குறிப்பாக புள்ளிப்பட்டியலில் நெதர்லாந்தை தவிர்த்து எஞ்சிய அணிகளை அசால்டாக 300 – 400 ரன்கள் அடித்து தோற்கடித்து வந்த தென்னாபிரிக்கா மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் தெறிக்கவிட்ட இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று செமி ஃபைனலுக்கு தயாராக இருக்கிறோம் என்ற எச்சரிக்கையை எதிரணிகளுக்கு கொடுத்துள்ளது.

- Advertisement -

பக்கா செல்பிஷ்:
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய தென்னாப்பிரிக்காவை பந்து வீச்சில் வெறும் 83 ரன்களுக்கு சுருட்டி மாஸ் வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்கள் சாய்த்தார்.

மேலும் அப்போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்து உலகக்கோப்பை வரலாற்றில் தங்களின் பிறந்தநாளில் சதமடிக்கும் முதல் இந்திய வீரராக சாதனை படைத்த விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அப்போட்டியில் சதமடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி அப்பட்டமான சுயநலத்துடன் விளையாடியதாகவும் ஆரம்பத்திலேயே அதிரடியாக 40 (24) ரன்கள் குவித்த ரோகித் சர்மா மட்டுமே அணிக்காக விளையாடியதாகவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அதிரடியாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “விராட் கோலியின் பேட்டிங்கில் நான் சுயநல உணர்வை பார்த்தேன். இந்த உலகக் கோப்பையில் இது 3வது முறையாக நடக்கிறது. குறிப்பாக 49வது ஓவரில் அவர் சிங்கிள் எடுத்து தன்னுடைய சதத்தை அடிக்க நினைத்தாரே தவிர அணியை முன்னிலைப்படுத்தி விளையாடவில்லை. ரோகித் சர்மாவும் சுயநல கிரிக்கெட்டை விளையாடி இருக்கலாம். ஆனால் அவர் விளையாடவில்லை”

இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிக்க அந்த அணியால் மட்டுமே முடியும்.. வாசிம் அக்ரம் வித்யாசமான பாராட்டு

“ஏனெனில் அவர் இந்தியாவுக்காக விளையாடுகிறார். தனக்காக அல்ல” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் கொல்கத்தா மைதானம் ஆரம்பத்தில் பேட்டிங்க்கு சாதமாகவும் நேரம் செல்ல செல்ல மிகவும் மெதுவாக இருந்ததால் 250 – 260 ரன்கள் அடித்தாலே போதும் என்று நினைத்ததாக போட்டியின் முடிவில் ரவீந்திர ஜடேஜா தெரிவித்திருந்தார். ஆனால் அதையும் தாண்டி கடினமான பிட்ச்சில் நங்கூரமாக விளையாடி இந்தியா 300 ரன்கள் தாண்ட உதவியதற்கு விராட் கோலியை பாராட்ட வேண்டுமென்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement