- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பார்மில் இல்லனா என்ன? விராட் கோலி ஓய்வு பெறப்போவது எப்போது? – அவரது முடிவு என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்தது தவிர்த்து மற்றபடி பெரிய அளவில் சிறப்பாக விளையாடவில்லை.

விராட் கோலி ஓய்வுபெறப்போவது எப்போது? :

அதுமட்டும் இன்றி 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டிகளின் முடிவில் ஒரே ஒரு சதத்தை மட்டுமே அடித்துள்ளதால் கடந்த ஆண்டு அவருக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் 36 வயதாகும் விராட் கோலி இந்திய அணியில் இருந்து விலகி ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற ஒரு பேச்சும் இருந்து வருகிறது.

- Advertisement -

ஏனெனில் பெர்த் போட்டியில் அடித்த சதத்தை தவிர்த்து மற்ற அனைத்து இன்னிங்ஸ்களிலும் அவர் ஒரே மாதிரியான வகையிலேயே ஆட்டம் இழந்ததோடு மட்டுமில்லாமல் இந்த தொடர் முழுவதுமே 23 ரன்கள் சராசரியுடன் 190 ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? அல்லது ஓய்வு அறிவிப்பாரா என்பது குறித்த பல்வேறு கேள்விகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் விராட் கோலி தனது ஓய்வு குறித்து எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவில் : 2027-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை அவர் விளையாடுவதாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது 36 வயதாகும் விராட் கோலி 38 வயது வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு பிறகு ஓய்வுபெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் தற்போது அவர் இருக்கும் பார்மை வைத்துப் பார்க்கையில் இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுமா? என்ற கேள்வியும் இருந்து வந்தது.

இதையும் படிங்க : நீங்க விளையாடணுமா? வேண்டாமா? என்கிற முடிவு அவங்ககிட்ட தான் இருக்கு – ரோஹித்தை எச்சரித்த மஞ்சரேக்கர்

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வந்த கோலியை ஓய்வுபெற ஒருபுறம் அனைவரும் வற்புறுத்தி வரும் வேளையில் அவரோ இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓய்வு குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கப் போவதில்லை என்பதில் திடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -