இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக தவறவிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 5 இன்னிங்ஸ்களில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் மீது ஏகப்பட்ட கேள்விகள் இருந்து வருகிறது.
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் :
பின்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது போட்டியில் தானாகவே அணியிலிருந்து வெளியேறினார். இப்படி ரோஹித் சர்மா அணியிலிருந்து வெளியேறியதும் அவர் ஓய்வு அறிவிக்கப்போகிறாரோ என்ற பேச்சுக்களும் பரவலாக இருந்து வந்தன. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் :
தான் தற்போதைக்கு மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக ஒரு பிரேக் தான் எடுத்துள்ளேன். அதை வைத்து யாரும் என்னுடைய ஓய்வு முடிவை யோசிக்க வேண்டாம். லேப்டாப்போ, பேனாவோ என்னுடைய ஓய்வு முடிவை நிர்ணயிக்காது. நான் தான் என்னுடைய ஓய்வு முடிவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். ஆனாலும் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தடுமாற்றத்தை சந்தித்து வரும் ரோகித் சர்மா ஏற்கனவே சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக இனி அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைப்பது கடினம் தான் என்று ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் ரோகித் சர்மாவின் முடிவு குறித்து பேசுகையில் கூறியதாவது : அதாவது ரோகித் சர்மா தற்போதைய இருக்கும் நிலையில் அவரது மோசமான பேட்டிங் ஃபார்ம் வெளிப்படையாக தெரிகிறது.
ஓய்வு முடிவு என்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட முடிவு தான். அந்த வகையில் ரோஹித்தின் ஓய்வு முடிவு என்பது அவரது கையில் தான் உள்ளது. ஆனாலும் அவர் பிளேயிங் லெவனில் விளையாடு வேண்டுமா? வேண்டாமா? என்பது தேர்வுக்குழுவினரது கையில்தான் உள்ளது. ஏனெனில் கடைசியாக நடைபெற்ற பல டெஸ்ட் தொடர்களில் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ஓய்வுக்கு பிறகு ரோஹித் சர்மா ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறலாம்.. நக்கலாக பேசிய – சைமன் கேட்டிச்
எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் அவர் விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பதை சேர்மேனும், தேர்வுக்குழுவினர் தான் முடிவு செய்வார்கள் என சஞ்சய் மஞ்சரேக்கர் நேரடியாக தனது கருத்தினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



