
சர்வதேச கிரிக்கெட்டில் ரன் மிஷினாக திகழ்ந்து வந்த விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் ரன் குவிக்காமல் தனது பார்மில் சற்று தடுமாற்றத்தை கண்டார். ஆனாலும் சிறிய ஓய்வுக்கு பிறகு ஆசிய கோப்பை தொடரில் அசத்தலான சதம் விளாசிய விராட் கோலி அதனை தொடர்ந்து டி20 உலக கோப்பையிலும் முக்கியமான வீரராக திகழ்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
அந்தவகையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முக்கியமான போட்டியில் மீண்டும் தான் ஒரு சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்துள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியில் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இந்திய அணிக்கு முதுகெலும்பாக நின்று 53 பந்துகளை சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 82 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.
விராட் கோலி இன்றைய போட்டியில் படைத்த ஒரு சம்பவம் தற்போது மிகப்பெரிய சாதனையாக மாறியுள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார்.
இதற்கு முன்னர் விராட் கோலி 17 முறை டி20 கிரிக்கெட்டில் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை சேசிங்கில் இருந்தபோது இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இன்று கடினமான இலக்கினை இந்திய அணி துரத்தி இருந்தாலும் இறுதிப்பந்து வரை களத்தில் நாட் அவுட்டாக இருந்த விராட் கோலி 18-வது முறையாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : என் வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னிங்ஸ் இது. உங்களுக்கு என் நன்றி – ஆட்டநாயகன் கோலி பேசியது என்ன?
ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரன்மிஷனாகவும், சேஸ் மாஸ்டராகவும் இருக்கும் விராட் கோலி மீண்டும் ஒருமுறை தான் அந்த பட்டத்திற்கு தகுதியானவர் தான் என்பதை இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் அவர் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.