ஏபிடி, தோனி என்னுடைய சிறந்த ரன்னிங் பார்ட்னர்ஸ் ஆனா அவர் ரொம்ப மோசமானவர் – இந்திய வீரர் பற்றி விராட் கோலி

Kohli-1
- Advertisement -

எந்த வகையான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி ஏற்படுத்தும் அழுத்தத்தை பவுண்டரிகள் அடிப்பதை விட சிங்கிள், டபுள் ரன்கள் எடுப்பதன் வாயிலாக பேட்மேன்களால் எளிதாக உடைக்க முடியும். மேலும் நீங்கள் எவ்வளவு சுமாரான பார்மில் இருந்தாலும் எதிரணி எவ்வளவு தரமாக பந்து வீசினாலும் 1 ரன்களை 2 ரன்களை மாற்றினால் எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து வெற்றி காண முடியும் என்று சுனில் கவாஸ்கர் அடிக்கடி கூறுவார். அப்படி கிரிக்கெட்டில் சிங்கிள், டபுள் எடுப்பது மிகவும் அவசியமாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு வேகமாக ஓடுவதும் அதை விட அவசியமாகும்.

Dhoni

- Advertisement -

அதனால் இந்த உலகில் சிங்கிள், டபுள் எடுத்து ரன்களை குவிக்க விரும்பும் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தாம் வேகமாக ஓடினால் மட்டுமல்லாமல் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேனும் அதற்கு சரியாக ஒத்துழைத்தால் தான் வெற்றிகரமாக ரன் எடுக்க முடியும். அந்த சமயத்தில் கொஞ்சம் கவன குறைவு அல்லது சொதப்பினாலும் ரன் அவுட்டாகி செல்ல வேண்டிய பரிதாபமும் ஏற்படும். அப்படி முக்கியமான சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இயற்கையாகவே அசத்துபவராக இருக்கிறார்.

மோசமான ரன்னர்:
ஏனெனில் தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்து ஃபிட்டாக இருக்கும் அவருக்கு 2 ரன் எடுக்க வேண்டிய இடத்தில் வேகமாக ஓடி 3 ரன்கள் எடுப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகும். இந்நிலையில் ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் மட்டுமே கிரிக்கெட்டில் தமக்கு நிகராக ரன்கள் எடுக்க ஓடுவதில் சிறந்த பார்ட்னர்கள் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடும் போது ரன் எடுக்க தோனியை அழைக்கவே தேவையில்லை என்று தெரிவிக்கும் அவர் தனது கேரியரில் புஜாராவை போல் மிகவும் மெதுவாக ஓடுபவரை பார்த்ததில்லை என்றும் கலகலப்பாக கூறியுள்ளார்.

ABD

இது பற்றி ஏபி டீ வில்லியர்ஸ் உடன் நிகழ்த்திய உரையாடலில் விராட் கோலி பேசியது பின்வருமாறு. “இது பற்றி இதற்கு முன் நிறைய முறை என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ரன்கள் எடுக்க ஓடும் போது ஏபி டீ வில்லியர்ஸ் தான் என்னுடன் மிகவும் வேகமாக ஓடக்கூடியவர். அவரை தவிர்த்து அவருக்கு நிகரான வேகமும் புரிதலையும் நான் கொண்ட ஒருவர் என்றால் அது எம்எஸ் தோனியாகும். அவர்களுடன் ரன்கள் எடுக்க ஓடும் போது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறேன் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஏபி டீ மற்றும் எம்எஸ் ஆகியோருடன் நான் விளையாடும் போது அவர்களை ரன்கள் எடுக்க அழைக்க தேவையில்லை”

- Advertisement -

“2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டியில் படிக்கட்டுகள் மிகவும் நீண்டதாக இருந்ததால் நான் களத்தில் இருந்த பெவிலியனில் அமர்ந்தேன். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்வதை நான் கேட்டேன். அதனால் பெரிய திரையை பார்த்த போது முதல் பந்தை எதிர்கொண்ட புஜாரா ஒய்ட் மிட் ஆன் திசையில் அடித்து விட்டு ரன்கள் எடுக்க ஓடினார். அப்போது அதை எடுத்த லுங்கி நிகிடி அவரை ரன் அவுட் செய்தார்”

pujara 1

“இருப்பினும் அது முதல் இன்னிங்ஸ் என்பதால் கவலை இல்லை. ஆனால் 2வது இன்னிங்ஸில் ஒரு பந்தை அடித்து விட்டு பார்திவ் படேல் ரன்கள் எடுக்க ஓடினார். அதை ஏபிடி துரத்தி சென்றார். ஆனால் ஏபிடி பந்தை எடுத்த பின்பும் புஜாரா 3வது ரன் எடுக்க அழைத்தார். குறிப்பாக ஸ்டம்ப்பில் அடிக்கும் ஆபத்தான திசையை நோக்கி புஜாரா ஓடினார். ஆனால் ரிப்ளையில் அதை பார்க்கும் போது அவர் திரையில் இல்லை. அதனால் பந்தை பிடித்து குயின்டன் டீ காக் எளிதாக அவுட் செய்தார்”

இதையும் படிங்க:திறமைய பாருங்க, இந்த ரூல் அப்போ இருந்திருந்தா பல ஜாம்பவான்கள் காணாம போயிருப்பாங்க – பிசிசிஐயை விளாசும் சேவாக்

“அப்போது “ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ரன் அவுட்டாகியுள்ள நீங்கள் ஏபிடி போன்ற அதிரடியான வேகத்தில் ஓடும் ஒருவர் பந்தை துரத்தி செல்லும் போது எந்த தைரியத்தில் 3வது ரன் எடுக்க அழைத்தீர்கள்” என்று புஜாராவை பற்றி நான் நினைத்தேன். குறிப்பாக பெரிய திரையில் இல்லாத அளவுக்கு புஜாரா அவுட்டானது எனது வாழ்வில் நான் பார்த்த மோசமான ரன் அவுட்டாகும்” என்று கூறினார்.

Advertisement