இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில்லை வளர்க்க பிசிசிஐ முயற்சித்து வருகின்றது. 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அடுத்த வருடமே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2021 காபா டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
அப்போதிலிருந்து ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறினார். அதே போல டெஸ்ட் போட்டிகளிலும் சொந்த மண்ணில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2023 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்று அசத்தினார். அப்படி 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய அவரை பிரின்ஸ் என்று ஒருதரப்பு ரசிகர்கள் பாராட்டினர்.
விமர்சனங்கள் தாண்டி:
அதன் காரணமாக ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் சுப்மன் கில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் நடைபெற்ற அறிமுகத் தொடரிலேயே 950+ ரன்கள் குவித்த அவர் 2 – 2 (5) என்ற கணக்கில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதன் காரணமாக ஒருநாள் அணியிலும் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு அவரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது.
அதே போல இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அடுத்த தலைவராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காத அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் 2026 டி20 உலகக்கோப்பை காட்டி தொடருக்கான இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டார்.
கில்லியாக கில்:
இந்நிலையில் 2025ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடியவில்லை. அதற்கு முன்பாக 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போட்டிகள் அனைத்தும் முடிவு பெற்றது. அதன் முடிவில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து விதமான 2025ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: கேப்டனாக ஆயுஷ், சூர்யவன்சி.. ஐசிசி 2026 அண்டர்-19 உ.கோ, தெ.ஆ தொடர் இந்திய அணி அறிவிப்பு
2025இல் இந்தியாவுக்காக 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 42 இன்னிங்ஸில் 1764 ரன்களை 49.00 சராசரியில் குவித்து அந்த அதனையைப் படைத்துள்ளார். அந்த வகையில் விமர்சனங்களைத் தாண்டி இந்த வருடத்தின் கில்லியாக கில் சாதனை படைத்துள்ளார். என்றால் மிகையாகாது. அந்தப் பட்டியல்:
1. சுப்மன் கில் (இந்தியா): 1764
2. ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்): 1760
3. ஜோ ரூட் (இங்கிலாந்து): 1613



