ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை வரும் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து, அமெரிக்கா, வங்கதேசம் அடங்கிய குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அத்தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை ஜனவரி 15ஆம் தேதி புலவாயோ மைதானத்தில் எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து இந்தியா அதே மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஜனவரி 17ஆம் தேதி விளையாட உள்ளது. கடைசி லீக் போட்டியில் இந்தியா ஜனவரி 24ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய அண்டர்-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்திய அணி அறிவிப்பு:
இந்நிலையில் அந்த 2 தொடர்களுக்கான இந்திய அண்டர் 19 அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக விளையாடும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 14 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி இளம் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்த நடைபெறும் உலகக் கோபையில் விளையாடுவதற்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீப காலங்களாகவே கேப்டனாக செயல்பட்டு வரும் ஆயுஷ் லேசான காயத்தை சந்தித்துள்ளார். எனவே தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சூரியவன்சி தலைமையில் இந்தியா விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படி விஹான் மல்கோத்ரா, வேதாந்தா திரிவேதி, அபிஞான் குண்டு, கனிஷ்க்கு சௌஹான், ஹெனில் பட்டேல், தீவேந்திரா தீபேஷ் என சமீபத்திய தொடர்களில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கேப்டமாக ஆயுஷ், சூர்யவன்சி:
தென்னாபிரிக்க தொடருக்கான அண்டர்-19 இந்திய அணி: வைபவ் சூர்யவன்சி (கேப்டன்), ஆரோன் ஜார்ஜ் (துணைக் கேப்டன்), வேதாந்த் திரிவேதி, அபிஞான் குண்டு (கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (கீப்பர்), ஆர்எஸ் ஆம்ப்ரிஷ், கனிஷ்க் சொஹாகன், கிளன் பட்டேல், முகமத் எனான், ஹெனில் பட்டேல், டி தீபேஷ் , கிஷான் குமார் சிங், உதவ் மோகன், யுவ்ராஜ் கோகில், ராகுல் குமார்
இதையும் படிங்க: 2 நாளில் முடிவடைந்த 4 ஆவது ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலிய வாரியத்திற்கு ஏற்பட்ட – இழப்பு எவ்வளவு தெரியுமா?
ஐசிசி அண்டர்-19 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்கோத்ரா (துணைக் கேப்டன்), வைபவ் சூர்யவன்சி , ஆரோன் ஜார்ஜ், வேதந்த் திரிவேதி, அபிஞான் குண்டு (கீப்பர்), ஹரவன்ஷ் சிங் (கீப்பர்), ஆர்எஸ் ஆம்ப்ரிஷ், கனிஷ்க் சொஹாகன் , கிளன் பட்டேல், முகமத் எனான், ஹெனில் பட்டேல், டி தீபேஷ், கிஷான் குமார் சிங், உதவ் மோகன்



