ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரானது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஏற்கனவே இந்த ஆஷஸ் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது.
2 நாளில் முடிந்த ஆட்டத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் :
இதனால் ஆஷஸ் கோப்பையை மீண்டும் ஒருமுறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணி தக்க வைத்து அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 25-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் பாக்சிங் டே போட்டியாக துவங்கியது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 152 ரன்களை குவிக்க பின்னர் தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக 42 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களை குவித்தது.
இதன் காரணமாக 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத இங்கிலாந்து அணி இந்த இலக்கையாவது துரத்துமா? என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வேளையில் இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இந்த பாக்சிங் டே போட்டி முழுவதுமாக ஐந்து நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இரண்டே நாளில் முடிவுக்கு வந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. அதோடு இந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியானது இரண்டே நாளில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : இன்னும் ஒரு விக்கெட் எடுத்தா போதும் ஒருநாள் போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ
அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 60 கோடியே 59 லட்ச ரூபாய் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் இரண்டாவது நாளிலேயே முடிவுக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



