இன்னும் ஒரு விக்கெட் எடுத்தா போதும் ஒருநாள் போட்டிகளில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவுள்ள சாதனை – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற 2 போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இதற்கடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் மும்முரமாக விளையாடி வருகின்றனர்.

ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்த இருக்கும் சாதனை :

இதற்கு அடுத்து இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் ஒருநாள் போட்டிகளுக்கான அணியும் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அப்படி ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது அந்த அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெற்றால் ஒரு மாபெரும் சாதனையை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை யாதெனில் :

- Advertisement -

எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர் அந்த தொடரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இந்திய அணிக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 89 போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : பி.சி.சி.ஐ-யின் ஆஃபரை மறுத்த வி.வி.எஸ் லக்ஷ்மணன்.. தப்பிய கவுதம் கம்பீரின் பதவி – விவரம் இதோ

ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாக ஒரு போட்டியில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாடியிருந்த அவர் அதன் பிறகு கடந்து இரண்டு ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement