
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் துவங்கியது. அந்தப் போட்டிக்கு முன்பாக விராட் கோலியிடம் முன்னாள் பயிற்சி அவர் ரவி சாஸ்திரி பேட்டி எடுத்தார். அப்போது இந்தத் தொடரில் தாம் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டை மதித்து சரியாக விளையாடவில்லை என்று விராட் கோலி வருத்தத்தை தெரிவித்து தவறை ஒப்புக்கொண்டார்.
குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தொடர்ச்சியாக அவுட்டாகி வந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முதல் போட்டியில் சதத்தை அடித்தும் அதை உணராமல் தாம் தொடர்ந்து சுமாராக விளையாடியதாக விராட் கோலி ஒப்புக்கொண்டார். அதனால் தம்முடைய பெருமை தவறியதை நினைத்து வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே சமயம் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் இந்தத் தொடரில் இந்தியாவை வெற்றி பெற வைக்க 2014 மெல்போர்ன் போட்டியில் 169 ரன்கள் குவித்ததைப் போல இம்முறையும் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்துவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 2 – 3 இன்னிங்ஸ் நான் விரும்பிய வழியில் செல்லவில்லை”
“களத்தில் நான் போதுமான அளவு நின்று நிதானமாக கட்டுப்பாட்டுடன் விளையாடவில்லை. இங்குள்ள பிட்ச் கடந்த முறை இங்கே நாங்கள் விளையாடியதை விட புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. எனவே இங்கே வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. பொதுவாக வித்தியாசமான சூழ்நிலைகளில் அணிக்கு தேவைப்படும் போது நான் பெருமையுடன் சவாலை எடுத்துக் கொள்ள விரும்புவேன்”
“அதற்கு இது போன்ற சூழ்நிலைகளை மதித்து பந்தை கண்களால் பார்த்து நிலைத்து விளையாடுவதே சரியான ஐடியாவாகும். என்னுடைய முதல் சுற்றுப் பயணத்திலிருந்தே மெல்போர்ன் ஸ்பெஷல் இடம். இங்கு நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நான் புரிந்து கொள்கிறேன். கடந்த முறை இங்கே நாங்கள் விளையாடிய போது வெற்றி கண்டு தொடரில் முன்னிலை பெற்றதால் நல்ல நினைவுகள் இருக்கிறது. 2014இல் இங்கே சதத்தை அடித்தேன்”
இதையும் படிங்க: தள்ளி போயிருந்தா குறைஞ்சி போயிருக்க மாட்டீங்க.. விராட் கோலி செய்த தவறை சுட்டிக்காட்டிய – கவாஸ்கர்
“எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும். அதில் உங்களுடைய சொந்தத் திட்டத்தை புரிந்து விளையாடுவது அவசியம். சூழ்நிலைகளை புரிந்து விளையாடுவது எனக்கு வெற்றியை கொடுக்கிறது. அந்த வகையில் இப்போது அணிக்கு என்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொண்டுள்ளேன். நாங்கள் 1 – 1 என்ற கணக்கில் இருப்பதால் இந்த வாய்ப்பை இரண்டு கைகளாலும் எடுத்துக் கொள்வோம்” எனக் கூறினார்.