தள்ளி போயிருந்தா குறைஞ்சி போயிருக்க மாட்டீங்க.. விராட் கோலி செய்த தவறை சுட்டிக்காட்டிய – கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி இன்று மெல்போர்ன் நகரில் “பாக்சிங் டே” போட்டியாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

விராட் கோலி அதை செய்ஞ்சிருக்கக்கூடாது :

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கிய இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளின் முதல் பாதியிலேயே சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது ரசிகர்களின் மத்தியில் பெருமளவு கவனத்தை ஈர்த்த விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கிய 19 வயதான சாம் கோன்ஸ்டாசுடன் மைதானத்தில் தோள் பட்டையால் மோதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை ஆரம்ப கட்டத்திலேயே அதிரடியாக எதிர்கொண்ட சாம் கோன்ஸ்டாஸ் ஒரு ஓவரை முடித்துவிட்டு எதிர் முனைக்கு செல்லும் போது வேண்டுமென்றே விராட் கோலி சென்று அவர் மீது மோதியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலி நிச்சயம் இதை செய்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசல் உள்ள தெருவில் ஒருவர் நடந்து சென்றால் கூட ஒருவர் எதிரில் வரும்போது நாம் வழிவிடலாம். வழி விடுவதால் நாம் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. கிரிக்கெட் களத்தில் இது போன்ற சம்பவங்களை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கோலி இதை செய்திருக்கக் கூடாது.

இதையும் படிங்க : 19 வயது இளம் வீரருடன் மோதிய விராட் கோலி.. சர்ச்சையால் தடை பெறும் அபாயம்? ஐசிசி ரூல்ஸ் சொல்வது என்ன?

இந்த சம்பவத்தை பார்த்த உடனே நிச்சயம் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிந்தது. கண்டிப்பாக முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் விராட் கோலி செய்த இந்த செயல் குறித்து அம்பயர் ஐ.சி.சி-யிடம் புகார் அளித்து கடும் அபராதம் விதிப்பார் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement