- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்சிபி அணியின் வரலாற்று வெற்றியே.. நெஞ்சை உடைக்கும் துன்பமா மாறிடுச்சு.. விராட் கோலி வேதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த பெங்களூரு ஏராளமான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் இம்முறை ரஜத் படிதார் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் கோப்பையை முத்தமிட்டது.

அதனால் விராட் கோலி 17 வருடங்கள் காத்திருந்து தன்னுடைய முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த வெற்றியை எதிர்பார்த்ததை போலவே ஆர்சிபி அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினார்கள். ஆனால் அந்த வெற்றி அடுத்த நாளே மிகப்பெரிய சோகமாக மாறியது என்றே சொல்லலாம்.

- Advertisement -

துன்பமாக மாறிய வெற்றி:

ஏனெனில் 17 வருடங்கள் காத்திருந்து பெற்ற வரலாற்று வெற்றியை ஆர்சிபி அணியினர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தங்களுடைய ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்தனர். அதை அறிந்த லட்சக்கணக்கான ஆர்சிபி ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்தனர். ஆனால் சின்னசாமி மைதானத்தில் குறிப்பிட்ட ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது.

அதனால் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயற்சித்ததால் காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி நெரிசல் உண்டானது. அதில் 11 ரசிகர்கள் இயற்கை எய்தியது ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தை சோகமாக மாற்றியது. அந்த ரசிகர்களுக்கு ஆர்சிபி நிர்வாகம் தலா 25 லட்சம் நிவாரணத் தொகையும் அறிவித்திருந்தது.

- Advertisement -

விராட் கோலி வேதனை:

இந்நிலையில் 11 ஆர்சிபி ரசிகர்கள் இயற்கை எய்தியது பற்றி முதல் முறையாக விராட் கோலி பேசியுள்ளார். இது குறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள அறிக்கையில் விராட் கோலி தெரிவித்தது பின்வருமாறு. “ஜூன் 4ஆம் தேதி போன்ற இதயத்தை உடைத்த மன உளைச்சலுக்கு வாழ்க்கையில் எதுவும் உங்களைத் தயார்படுத்தாது. எங்கள் அணியின் வரலாற்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டிய தருணம் துன்பமாக மாறியது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும் காயமடைந்த எங்கள் ரசிகர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்”

இதையும் படிங்க: வீழ்ந்த இடத்திலேயே எழுந்து.. இந்தியாவின் ஆசியக் கோப்பை துருப்புச்சீட்டாக வருண் வருவாரு.. பதான் கணிப்பு

“உங்கள் இழப்பு எப்போதும் எங்களுடைய கதையின் ஒரு பகுதியாக இருக்கும். இங்கிருந்து நாம் ஒன்றாக அக்கறையாக மரியாதை மற்றும் பொறுப்புடன் முன்னேறுவோம்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். அதிலிருந்து பாடத்தைக் கற்றுள்ள ஆர்சிபி அணி வருங்காலங்களில் ரசிகர்களின் பாதுகாப்புக்காக புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. மேலும் ரசிகர்களின் பாதுகாப்புக்காக அணி நிர்வாகம் சார்பில் முக்கிய ஏற்பாடுகளும் செய்யப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -