13 வருடம் 113 போட்டிகள்.. விராட் கோலியின் முடிவால்.. இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

Virat Kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் கடைசி 3 போட்டிகளில் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மீண்டும் சொந்த காரணங்களுக்காக தேர்வு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ஏற்கனவே சொன்னது போல் விராட் கோலியின் முடிவை மதிப்பதாக அறிவித்துள்ள பிசிசிஐ அவருடைய சொந்த வாழ்க்கையில் ரசிகர்களும் ஊடகங்களும் தலையிடாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடாத விராத் கோலி தற்போது கடைசி மூன்று கோடிகளிலும் விளையாட போவதில்லை என்ற செய்தி ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கேரியரில் முதல் முறை:
ஏனெனில் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் முதலிரண்டு போட்டிகளில் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதால் தனது மனைவியுடன் இருக்க விரும்பிய காரணத்தாலேயே விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என அவருடைய நண்பர் ஏபி டீ வில்லியர்ஸ் சமீபத்தில் தெரிவித்தார்.

ஒருவேளை அதே காரணத்தால் அவர் இந்த தொடரின் கடைசி 3 போட்டிகளிலும் விலகுவதற்கான முடிவை எடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி கடந்த 13 வருடங்களாக 113 போட்டிகளில் விளையாடி 8848* ரன்களையும் 29 சதங்களையும் அடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அறிமுகமானது முதல் கடந்த 13 வருடங்களில் தன்னுடைய கேரியரில் இப்படி அவர் ஒருமுறை கூட ஒரு டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடாமல் இருந்ததில்லை. குறிப்பாக கடந்த 13 வருடங்களில் இந்தியா விளையாடிய 2, 3, 4, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் ஓரிரு போட்டிகளில் விளையாடாமல் போனாலும் குறைந்தபட்சம் அவர் ஒரு போட்டியிலாவது விளையாடியுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ஆர்.சி.பி வீரர்.. யார் இந்த ஆகாஷ் தீப்? – தேர்வாக என்ன காரணம்?

இருப்பினும் தற்போது தான் தன்னுடைய கேரியரிலேயே முதல் முறையாக அதுவும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடவில்லை. மேலும் விராட் கோலி இல்லாதது இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததாக மைக்கேல் வாகன், மைக்கேல் ஆதர்டன், மாண்டி பனேசர் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அப்படிப்பட்ட விராட் கோலி தன்னுடைய 13 வருட கேரியரில் முதல் முறையாக இந்த டெஸ்ட் தொடரில் முழுமையாக விளையாடாமல் விலகியுள்ளது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றால் மிகையாகாது.

Advertisement