சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக ஜனவரி 11-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் கடைசி டி20 தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் பி.சி.சி.ஐ சார்பில் வெளியாகவில்லை.
அதனை தொடர்ந்து ஜனவரி 6-ஆம் தேதி இன்று சனிக்கிழமை மாலைக்குள் இந்திய அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் கம்பேக் கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதோடு முன்னணி வீரரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை தவிர்த்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஹார்டிக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும் தற்போது வெளியான ஒரு உறுதியற்ற தகவலின் படி : விராட் கோலி இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றாலும் நிச்சயமாக உலக கோப்பை டி20 தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக ஒரு உறுதியற்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : இந்திய அணி டி20 வேர்லடுகப்பை ஜெயிக்கனும்னா.. அவரு ஐ.பி.எல் தொடர்ல ஆடக்கூடாது – டேனிஷ் கனேரியா கருத்து
என்னதான் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 உலக கோப்பையில் விளையாட தயார் என்று கூறினாலும் ரோஹித் மட்டுமே கேப்டனாக தொடர்வார் என்றும் விராட் கோலி கழட்டிவிடப்பட்டு அவரது இடத்தில் இளம் வீரர் ஒருவருக்கே டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.