இந்திய அணி டி20 வேர்லடுகப்பை ஜெயிக்கனும்னா.. அவரு ஐ.பி.எல் தொடர்ல ஆடக்கூடாது – டேனிஷ் கனேரியா கருத்து

Danish-Kaneria
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை தோல்வியையே சந்திக்காமல் சென்று கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பினை இழந்தது.

அதனை தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த இலக்காக இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரானது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த சில தகவல்களை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பும்ரா எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஜஸ்ப்ரீத் பும்ராவை காயத்திலிருந்து பாதுகாப்பது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் பும்ராவின் தேவை நிச்சயம் அதிகமாக இருக்கும். அவரைப் போன்ற ஒரு வீரர் காயத்தால் இந்த டி20 உலக கோப்பையிலும் விளையாடவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

- Advertisement -

எனவே எதிர்வரும் இந்த டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாட கூடாது. ஒருவேளை அப்படி விளையாடினாலும் அவரின் பணிச்சுமையை கணக்கில் கொண்டு குறைவான போட்டிகளிலேயே விளையாட வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : ஐசிசி விருதுகள் 2023 : சிறந்த டெஸ்ட் பிளேயர் விருது – 3 வெளிநாட்டு வீரர்களை முந்தி வெல்வாரா அஸ்வின்

அப்படி செய்தால் மட்டுமே இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஒருவேளை அவருக்கு காயம் ஏற்பட்டு இம்முறையும் இந்த டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடாமல் போனால் இந்திய அணி பெரிய சரிவை சந்திக்கும் என்று டேனிஷ் கனேரியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement