ஐசிசி விருதுகள் 2023 : சிறந்த டெஸ்ட் பிளேயர் விருது – 3 வெளிநாட்டு வீரர்களை முந்தி வெல்வாரா அஸ்வின்

IND vs AUS 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஐசிசி விருதுகள் வழங்குவது வழக்கமாகும். அந்த வகையில் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 2023 காலண்டர் வருடத்தில் அசத்திய சிறந்த வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. 2023ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற பெயரில் ஐசிசி வழங்கப் போகும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.

1. ரவிச்சந்திரன் அஸ்வின்: தம்முடைய அனுபவம் மற்றும் திறமையால் அசத்தி வரும் அஸ்வின் கடந்த வருடம் வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்து வருகிறார். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்வதற்கு 25 விக்கெட்கள் எடுத்து அவர் முக்கிய பங்காற்றியதை மறக்க முடியாது.

- Advertisement -

இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்தை சந்தித்த அஸ்வின் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு இந்த விருது வென்ற பெருமைக்குரியவர். மேலும் 2021இல் பரிந்துரைக்கப்பட்ட அவர் 2வது முறையாக இந்த விருதை இம்முறையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக ரசிகர்களிடம் இருக்கிறது.

2. டிராவிஸ் ஹெட்: லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 143 ரன்கள் விளாசிய இவர் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் கடந்த வருடம் மொத்தம் 12 போட்டிகளில் 919 ரன்கள் குவித்ததால் இந்த விருதுக்கு டிராவிஸ் ஹெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

3. ஜோ ரூட்: 2021ஆம் ஆண்டு ஏற்கனவே இந்த விருதை வென்றுள்ள இவர் 2023 காலண்டர் வருடத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 787 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றினார். அதன் காரணமாக இந்த விருதை வெல்வதற்கு அவர் 2வது முறையாக பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி கூறியுள்ளது.

இதையும் படிங்க: தொப்பி மீது பந்து பட்டும் பெனால்டி வழங்காத அம்பயர்கள்.. பாகிஸ்தான் தப்பியது எப்படி?

4. உஸ்மான் கவாஜா: 2023 நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடிய இவர் 1210 ரன்கள் குவித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் 496 ரன்கள் குவித்த அவர் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்க உதவினார். அதன் காரணமாக இந்த விருந்துக்கு கவாஜாவும் பரிந்துரைக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement