தொப்பி மீது பந்து பட்டும் பெனால்டி வழங்காத அம்பயர்கள்.. பாகிஸ்தான் தப்பியது எப்படி?

Saim Ayub
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 313 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அமீர் ஜமால் 82, முகமது 88 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் 299 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 14 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது. ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 60, மிட்சேல் மார்ஷ் 54 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

நோ பெனால்டி:
ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது நாள் முடிவில் 68/7 என்று தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு பாபர் அசாம், கேப்டன் சான் மசூத் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் களத்தில் முகமது ரிஸ்வான் 6* ரன்களுடன் போராடி வருகிறார். தற்சமயத்தில் வெறும் 82 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் முன்னிலையாக பெற்றிருப்பதால் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்ப்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக இப்போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது சஜித் கான் வீசிய 64வது ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் சிக்ஸர் அடிக்கும் முனைப்புடன் தூக்கி அடித்தார்.

- Advertisement -

இருப்பினும் சரியாக அடிக்காததால் மைதானத்தின் நடுவிலேயே விழுந்து சென்ற பந்தை பவுண்டரி செல்லாமல் தடுப்பதற்காக பாகிஸ்தான் வீரர் சாய்ம் ஆயுப் வேகமாக ஓடினார். அப்போது பவுண்டரியை டைவ் அடித்து தடுக்க முயற்சித்து அவர் மைதானத்தில் தடுக்கி தலை கீழாக பல்டி அடித்து பந்து நிறுத்தினார். நல்ல வேளையாக அந்த சமயத்தில் காயத்தை சந்திக்காத போதிலும் டைவ் அடித்த போது அவரின் தலையிலிருந்து கழன்று விழுந்த தொப்பியில் பந்து பட்டது.

இதையும் படிங்க: ஐசிசி விருதுகள் 2023 : லெஜெண்ட் சோபர்ஸ் கோப்பையை வெல்ல கிங் கோலியுடன் 3 வீரர்கள் போட்டி

அதை தொடர்ந்து எழுந்த அவர் பந்தை எடுத்து வீசினார். இருப்பினும் தொப்பியில் பந்து பட்டதற்காக நடுவர்கள் விதிமுறைப்படி 5 ரன்கள் பெனால்டி வழங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் களத்தில் வீரர்களின் ஹெல்மெட் போன்ற எந்த உபகரணங்களும் பந்து செல்வதற்கு தடையாக லேசாக உரசினால் கூட அதற்கு பெனாலிட்டியாக 5 ரன்கள் வழங்க வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் விக்கெட் கீப்பர்கள் ஹெல்மெட்டை வைத்திருப்பது போல் அந்த சமயத்தில் வேண்டுமென்றே அவர் தொப்பியை கீழே விடவில்லை என்பதை கருதிய நடுவர்கள் பாகிஸ்தானுக்கு 5 ரன்களை பெனால்ட்டியாக வழங்கவில்லை.

Advertisement