ஐசிசி விருதுகள் 2023 : லெஜெண்ட் சோபர்ஸ் கோப்பையை வெல்ல கிங் கோலியுடன் 3 வீரர்கள் போட்டி

ICC World Cup
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அணிக்காக சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்குவது வழக்கமாகும். அந்த வரிசையில் 2023ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதுக்காக 4 தகுதியான வீரர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. அதாவது டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள்.

ஐசிசி வழங்கும் விருதுகளிலேயே மிகவும் உயரிய இந்த விருது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் ஃகேர்பீல்ட் சோபர்ஸ் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இம்முறை அவருடைய பெயரில் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள 4 வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. விராட் கோலி: 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்த இவர் இந்த வருடம் 3 வகையான கிரிக்கெட்டிலும் 35 போட்டிகளில் 2048 ரன்கள் குவித்து தன்னுடைய தரத்தை நிரூபித்தார். குறிப்பாக 765 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு போராடிய அவர் ஒரு உலகக் கோப்பையில் (2023) அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை தகர்த்து மாபெரும் உலக சாதனை படைத்தார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் இம்முறையும் இவ்விருதை வெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இம்முறையும் வென்றால் சோபர்ஸ் கோப்பையை அதிக முறை (3) வென்ற வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைப்பார்.

- Advertisement -

2. டிராவிஸ் ஹெட்: 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 தொடர்களை ஆஸ்திரேலியா வெல்வதற்கு இவர் முக்கிய பங்காற்றியதை இந்திய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இந்த வருடம் 31 போட்டிகளில் வெறும் 1698 ரன்கள் மட்டுமே எடுத்தாலும் அந்த 2 தொடர்களின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதமடித்த அவர் ஆஸ்திரேலியா 2 சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றியதால் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

3. பட் கமின்ஸ்: 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 தொடர்களிலும் கேப்டனாக செயல்பட்டு ஒரே வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 2 கோப்பைகளை வென்று கொடுத்த இவரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கேப்டனாக மட்டுமின்றி இந்த வருடம் 24 போட்டிகளில் 422 ரன்கள் மற்றும் 59 விக்கெட்டுகளை எடுத்து பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வெளியான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. ஆஸ்திரேலியா முதலிடம் – இந்திய அணி எத்தனையாவது இடம் தெரியுமா?

4. ரவீந்திர ஜடேஜா: பேட்டிங் பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய இவர் இந்த வருடம் 35 போட்டிகளில் 613 ரன்கள் மற்றும் 66 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2023 காலண்டர் வருடத்தில் அதிக விக்கெட்டுகள் (66) எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து அசத்திய காரணத்தால் ஜடேஜாவும் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement