வெளியான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. ஆஸ்திரேலியா முதலிடம் – இந்திய அணி எத்தனையாவது இடம் தெரியுமா?

IND-vs-AUS
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பல டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் ஐசிசி நிர்வாகமானது இன்று வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இருப்பினும் முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை அற்புதமாக வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. இதன் காரணமாக இந்திய அணி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியானது புதிதாக வெளியாகியுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை விட கூடுதலாக ஒரு புள்ளியைப் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

அதன்காரணமாக இந்திய அணி 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று தென்னாப்பிரிக்க அணி இந்த புள்ளிபட்டியலில் நான்காவது இடத்தையும், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அடுத்த அடுத்த இடங்களிலும் உள்ளன.

இதையும் படிங்க : சிராஜ் இல்லைனா இந்தியா காலி.. வென்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் தவறை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரினை வெல்லும் வாய்ப்பினை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் நோக்கில் டெஸ்ட் போட்டிகளில் பலமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement