சிராஜ் இல்லைனா இந்தியா காலி.. வென்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் தவறை விமர்சித்த சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் 13 வருடங்கள் கழித்து இந்தியா சமன் செய்து அசத்தியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை கொடுத்த தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் 55 ரன்களுக்கு சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்து கோப்பையை பகிர்ந்து கொண்டது.

இந்த வெற்றிக்கு முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த சிராஜ் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா ஆகியோர் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. ஏனெனில் முதல் இன்னிங்சில் 153/4 என்ற நிலையில் இருந்த இந்தியா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு சவாலான பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் சுமாராகவே செயல்பட்டார்கள்.

- Advertisement -

ரோஹித்தின் தவறு:
இருப்பினும் முதல் போட்டியில் தோல்வியை சந்திப்பதற்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்து முக்கிய காரணமாக இருந்த ரோகித் சர்மா 2வது போட்டியில் ஓரளவு நன்றாக செயல்பட்டார். குறிப்பாக 2 – 3 விக்கெட்களை எடுத்ததும் சிராஜுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து 9 ஓவர்கள் கொடுத்த அவருடைய முடிவு வெற்றியின் முக்கிய பங்காற்றியது.

ஆனாலும் 2வது போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்ததாக சஞ்சய் மஞ்ரேக்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் முகமது சிராஜ், பும்ரா சிறப்பாக பந்து வீசி வெற்றியை உறுதி செய்ததாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டியில் நீங்கள் குறிப்பிட்ட சில தருணங்களை இழந்தால் போட்டியையே இழக்க நேரிடும். ரோகித் சர்மா இந்த 2 போட்டிகளிலுமே தவறுகளை செய்தார்”

- Advertisement -

“அது முதல் போட்டியில் பெரிய தோல்வியை கொடுத்தது. நல்ல வேளையாக 2வது போட்டியில் முகமது சிராஜ் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக மார்க்ரம் அதிரடியாக விளையாடிய போது சிராஜ் ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அந்த சமயத்தில் அவரை அதிகமாக ரோகித் பயன்படுத்தாததால் தென்னாப்பிரிக்காவின் முன்னிலை 60 ரன்களை தாண்டியது. ரோகித் சர்மா இப்போதும் பழைய பள்ளியைச் சேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருக்கிறார்”

இதையும் படிங்க: இந்த தொடருக்கு பின் அவர் மீதான மரியாதை கூடிருச்சு.. இந்திய வீரரை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

“எனவே எவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். ஒருவேளை டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால் அதற்கான போட்டியில்லை. ஆனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுவார். அவருக்காக நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில் நடைபெற்ற இந்த தொடரில் விராட் கோலி இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார். அவருக்கு அடுத்த 2வது சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விரைவில் வருவார்” என்று கூறினார்.

Advertisement