இந்த தொடருக்கு பின் அவர் மீதான மரியாதை கூடிருச்சு.. இந்திய வீரரை பாராட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. அதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து அசத்திய இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலிலும் பாகிஸ்தான் போன்ற அணிகளை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் ராஜாங்கம் நடத்திய இத்தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே தடுமாற்றம் இல்லாமல் சிறப்பாக விளையாடி தங்களுடைய தரத்தையும் கிளாஸையும் வெளிப்படுத்தினார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸ் 76 ரன்கள் அடித்த விராட் கோலி இந்தியாவின் வெற்றிக்கு முடிந்தளவுக்கு போராடினார்

- Advertisement -

மரியாதை அதிகம்:
அதை விட கேப் டவுனில் நடைபெற்ற 2வது போட்டியின் முதல் நாளில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் 26 முறை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். ஆனால் அதில் விராட் கோலி மட்டுமே அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்து தம்முடைய தரத்தை காண்பித்தார். இந்நிலையில் கேப் டவுன் போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங்கை பார்த்த பின் விராட் கோலி மீதான தன்னுடைய மரியாதை அதிகரித்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் வித்தியாசமான பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதல் முறையாக (2010இல்) விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு இளம் வீரராக வந்தார். அந்த வயதில் புத்துணர்ச்சியுடன் விளையாடிய அவருக்கு மனம் எதிரியாக இருந்தது. இருப்பினும் உங்களின் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க 20 வயதில் என்ன செய்தீர்களோ அதை நிறுத்தி விடுவீர்கள். அந்த வகையில் கடந்த தென்னாப்பிரிக்க தொடரை ஒப்பிடும் போது இம்முறை அவருடைய செயல்பாடுகள் அபாரமாக இருந்தது”

- Advertisement -

“இந்த பையன் மீதான என்னுடைய மரியாதை தற்போது அதிகரித்துள்ளது. ஏனெனில் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள இவர் 25 வயதுடையவர் கிடையாது. ஆனால் கடந்த 3 – 4 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது அவர் தன்னுடைய ஷாட்டுகளில் நிறைய புதுமையை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக வெள்ளைக் கோட்டுக்கு நெருக்கமாக இருந்து ஸ்கொயர் கட் அடிக்கும் அவர் ஆட் பந்துகளை ஃபுல் அடிக்கிறார்”

இதையும் படிங்க: ஐசிசி 2024 டி20 உ.கோ : நியூயார்க்கில் பாகிஸ்தானுடன் மோதல்.. இந்திய அணியின் அட்டவணை இதோ

“கடந்த தொடரில் வெறும் 34 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது அவரை காயப்படுத்தி இருக்கும். எனவே ரன்கள் அடிப்பதற்கு முன்பாக அவர் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டிய நிலைமையில் இருந்தார். தற்போது அதில் முன்னேறியுள்ள அவர் கேப் டவுன் போன்ற பிட்ச்சில் அசத்துவதற்கு நல்ல ஸ்டிரைக் ரேட் தான் முக்கிய காரணமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement