சச்சினை போன்றே போராடி வீழ்ந்த விராட் கோலி.. அன்றும் இன்றும்.. 20 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவம் – விவரம் இதோ

Sachin-and-Kohli
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐசிசியின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மாபெரும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் மீண்டும் ஒருமுறை தோல்வியை தோற்கடித்துள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதல் 10 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்றே அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த இந்த இறுதிப்போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை குவிக்க பின்னர் 241 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 குவிக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி ஆறாவது முறையாக 50 ஓவர் உலககோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்த தோல்வி இந்திய அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ள வேளையில் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதினை விராட் கோலி வென்றிருந்தார். விராட் கோலி இதுவரை இந்த தொடரில் 11 விளையாடியுள்ள வேளையில் 765 ரன்கள் குவித்து இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்றார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் 600-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்த வேளையில் தற்போது மீண்டும் ஒருமுறை 20 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் விராட் கோலி அந்த விருதினை வென்றுள்ளார்.

இதையும் படிங்க : உலகக்கோப்பை 2023 : தோல்வியை சந்தித்த போதிலும் ரிக்கி பாண்டிங்கை முந்திய விராட் கோலி – விவரம் இதோ

இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் விராட் கோலியின் இந்த போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடர்களில் 2011-ஆம் ஆண்டு யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தபோது மட்டுமே இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வேளையில் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளை வென்ற போது இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement