சந்தேகமே வேண்டாம்.. கண்டிப்பா அந்த சீரிஸ்ல விராட் கோலி விளையாடுவாரு.. சல்மன் பட் நம்பிக்கை

Salman Butt
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய 6வது முறையாக வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் 9 வெற்றிகளை பெற்று பட்டைய கிளப்பிய இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து. ஆனால் முக்கியமான ஃபைனலில் பேட்டிங்கில் கோட்டை விட்ட இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

அதனால் 2011 போல சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் கோப்பையை முத்தமிடும் பொன்னான வாய்ப்பை இந்தியா நழுவ விட்டது. அதன் காரணமாக இத்தொடரில் மிக சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் களத்திலேயே கண்ணீர் விட்டு கலங்கியது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

- Advertisement -

கண்டிப்பா ஆடுவாரு:
அதிலும் குறிப்பாக 11 போட்டிகளில் 9 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து 3 சதங்கள் உட்பட 765 ரன்கள் குவித்த விராட் கோலி ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்தும் கடைசியில் கோப்பையை வெல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றார். மேலும் 2014, 2016 டி20 உலகக் கோப்பைகளை தொடர்ந்து இத்தொடரிலும் தொடர் நாயகன் விருது வென்ற அவர் உலகிலேயே 3 ஐசிசி தொடர் நாயகன் வென்ற ஒரே வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார்.

ஆனாலும் கைக்கு கிடைத்த கோப்பையை தொட முடியாத அவர் தற்போது 35 வயதை கடந்து விட்டதால் 2027 உலகக்கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற முடியுமா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் அடுத்ததாக 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்பே மற்றும் நமீபியா நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பையின் போது விராட் கோலி 38 – 39 வயதை தொட்டு விடுவார்.

- Advertisement -

இந்நிலையில் உலக கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக திகழும் விராட் கோலி கண்டிப்பாக 2027 உலக கோப்பையில் விளையாடுவார் என்று நம்புவதாக சல்மான் பட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபிட்னஸ் மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக விளையாடும் விராட் கோலி ஏன் அடுத்த 4 வருடங்கள் கழித்தும் விளையாட மாட்டார் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை”

இதையும் படிங்க: அந்த விசயத்துல வற்புறுத்தாதீங்க .. கோலிய ஃபாலோ பண்ணா ரோஹித் ஈஸியா அதை செய்யலாம்.. முரளிதரன் கருத்து

“குறிப்பாக தற்போதுள்ள ஃபிட்னஸ் மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் நிச்சயமாக 38 வயதை கடந்தாலும் அவர் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவார” என்று கூறினார். அந்த வகையில் ஏற்கனவே 2011இல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள விராட் கோலி 2027 உலகக்கோப்பையில் விளையாடி 2வது கோப்பையை முத்தமிட்டு வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement