அந்த விசயத்துல வற்புறுத்தாதீங்க .. கோலிய ஃபாலோ பண்ணா ரோஹித் ஈஸியா அதை செய்யலாம்.. முரளிதரன் கருத்து

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக விளையாடி ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை சொந்த மண்ணில் நிறுத்தி 2011 போல கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்தியா தவற விட்டது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது.

அதனால் இத்தொடரில் உச்சகட்டமாக 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தும் கோப்பையை வெல்ல முடியாத விராட் கோலி சோகமடைந்தார். அவரை விட ஒவ்வொரு போட்டியிலும் தன்னுடைய சொந்த சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்கி நல்ல துவக்கத்தை கொடுத்த ரோஹித் சர்மா கோப்பையை தொட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்ததால் களத்திலேயே கண்ணீர் விட்டு கலங்கினார்.

- Advertisement -

முரளிதரன் ஆதரவு:
அந்த நிலைமையில் 36 வயதை கடந்து விட்ட ரோஹித் சர்மா மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் விளையாட விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகின. குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு புதிய இளம் இந்திய அணியை உருவாக்கும் வேலையை மறைமுகமாக கடந்த வருடமே பிசிசிஐ துவங்கியது.

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவை பிசிசிஐ கழற்றி விட நினைப்பதற்கு ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவை டி20 கிரிக்கெட்டில் விடை பெறுமாறு வற்புறுத்த வேண்டாம் என்று முரளிதரன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விராட் கோலி போல நல்ல ஃபிட்னஸ் கடைபிடிக்கும் பட்சத்தில் 2027இல் தம்முடைய முதல் உலகக் கோப்பையை வெல்வதற்கு மீண்டும் ரோகித் சர்மாவால் போராட முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உலகக் கோப்பையில் அவருடைய செயல்பாடுகளை பாருங்கள். அவர் கொடுத்த அதிரடியான துவக்கத்திற்கு பின்னால் இருக்கும் ஸ்ட்ரைக் ரேட்டை கவனியுங்கள். இத்தொடரில் அவர் எப்போதுமே சொதப்பவில்லை. 36 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார். விராட் கோலி போல ஃபிட்னஸ் கடை பிடித்தால் அவரால் இன்னும் ஒரு உலகக் கோப்பையில் விளையாட முடியும்”

இதையும் படிங்க: மக்கள் என்னை இப்படி கூப்பிடும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் வருத்தம்

“மேலும் ஏன் அவரை ஒதுக்கி விட்டு டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை கொண்டு வருவதற்கு இதுவே சரியான நேரம் என்று கடினமான பேச்சுக்களை மக்கள் பேசுகின்றனர். வயதை பார்க்காமல் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் தொடர்ந்து விளையாட அனுமதியுங்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித்தின் 130 என்ற ஸ்டிரைக் ரேட் டி20 கிரிக்கெட்டுக்கு மோசமானதல்ல. எனவே மோசமான வீரராக இல்லாத அவர் நல்ல ஃபிட்னஸை கடைப்பிடித்து ஆசைப்பட்டால் அடுத்த உலக கோப்பையில் விளையாடலாம். இது அவருடைய மனதிலும் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement