மக்கள் என்னை இப்படி கூப்பிடும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு – சஞ்சு சாம்சன் வருத்தம்

Sanju-Samson
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே விளையாடி வரும் வேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2015-ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக இதுவரை 24 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் அவருக்கான நிரந்தர இடம் கிடைக்காமல் போராடி வருகிறார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை கடந்து 2013-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 152 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.

- Advertisement -

அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் என்னதான் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தாலும் டி20 இந்திய அணியை பொறுத்த வரை அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர் என அனைத்திலுமே அவர் கேரளா அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டு வந்த வேளையிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் தொடர்ந்து இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்படுவது குறித்து வேதனையை தெரிவித்துள்ள சஞ்சு சாம்சன் கூறுகையில் :

- Advertisement -

மக்கள் என்னை ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று அழைக்கிறார்கள். நான் இன்று இருக்கும் இடமே நான் நினைத்ததை விட ஒரு பெரிய இடம்தான் என சஞ்சு சாம்சங் வெளிப்படையாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார், மேலும் ரோகித் சர்மா என்னை ஐபிஎல் தொடர்களில் பார்த்தபோது என்னுடைய பேட்டிங்கை கண்டு பாராட்டியதாகவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்லாம உங்களால அதை சாதிக்க முடியாது.. பிசிசிஐ மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

கடந்து 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சஞ்சு சாம்சங் இதுவரை வெறும் 24 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வெறும் 13 போட்டியிலே விளையாடி உள்ளார். தோனிக்கு பிறகு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இதுவரை நிரந்தர வாய்ப்பின்றி தனது இடத்திற்காக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement