தயவுசெய்து எங்களை தொந்தரவு செய்யாமல் இருங்க. வேண்டுகோள் வைத்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது கோலாகலமாக துவங்க உள்ளது. 13-வது முறையாக நடைபெறும் இந்த மாபெரும் கிரிக்கெட் தொடர் இம்முறை முற்றிலும் இந்தியாவில் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரானது ஏகப்பட்ட வரவேற்பினை பெற்றுள்ளது.

நாளைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அகமதாபாத் நகரில் பலபரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி அக்டோபர் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

- Advertisement -

மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தியா முழுவதிலும் உள்ள 10 மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆரம்பித்த உடன் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகின்றன.

மேலும் டிக்கெட்டின் விலையும் பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான டிக்கெட் கேட்டு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது நண்பர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் அன்பான வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : தயவுசெய்து உலககோப்பை டிக்கெட்டுகளை என்னிடம் இந்த தொடர் முழுவதுமே கேட்க வேண்டாம். வீட்டிலிருந்தே போட்டிகளை கண்டு ரசியுங்கள் என்று ஜாலியாக அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவினை கண்ட அனுஷ்கா சர்மாவும் : தயவு செய்து என்னையும் சேர்த்துக்கோங்க. என்னிடமும் யாரும் டிக்கெட் கேட்டு மெசேஜ் செய்ய வேண்டாம்.

இதையும் படிங்க : ஏசியன் கேம்ஸ் 2023 : வெறித்தனமாக போராடிய மலேசியா.. வங்கதேசம் வெறும் 116 ரன்கள்.. நூலிழையில் மாறிய வெற்றி

உங்களுடைய மெசேஜ்களுக்கு என்னிடம் இருந்து பதில் வராது புரிந்து கொள்ளுங்கள் ப்ளீஸ் என்று அவரும் பதிலளித்துள்ளார். இப்படி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா பகிர்ந்த இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாளை அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement