ஏசியன் கேம்ஸ் 2023 : வெறித்தனமாக போராடிய மலேசியா.. வங்கதேசம் வெறும் 116 ரன்கள்.. நூலிழையில் மாறிய வெற்றி

Malaysia
- Advertisement -

சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கிரிக்கெட் பிரிவில் அக்டோபர் 4ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30 மணிக்கு நடைபெற்ற 4வது காலிறுதி போட்டியில் வங்கதேசம் மற்றும் மலேசியா அணிகள் மோதின. அதில் வங்கதேசத்தை விட மலேசியா கத்துக்குட்டியாக பார்க்கப்படுவதால் மோசமாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் எமோன் 0, ஹசன் ஜாய் 0 என வங்கதேசத்தின் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே ஆச்சரியத்தை கொடுத்த மலேசியா அடுத்து வந்த ஜாகிர் ஹசனையும் 1 ரன்னில் காலி செய்தது. அதனால் 3/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்று திண்டாடிய வங்கதேசத்திற்கு அதிரடியாக விளையாடிய அபிப் ஹொசைன் 23 (14) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் மிடில் ஆர்டரில் கேப்டன் சாய்ஃப் ஹசன் 50* (52) ரன்களும் சதாத் ஹொசைன் 21 (26), ஜாகர் அலி 14* (14) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர்.

- Advertisement -

போராட்ட தோல்வி:
அப்போதும் 20 ஓவர்களில் வங்கதேசம் 116/5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் பந்து வீச்சில் அசத்திய மலேசியா சார்பில் அதிகபட்சமாக பவந்திப் சிங் 2 விக்கெட்டுகளும் விஜய் உன்னி, அன்வர் ரகுமான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 117 என்ற இலக்கை துரத்திய மலேசியாவுக்கு ஜூல்கிபில் 1, முகமது அமீர் 0, கேப்டன் அஹ்மத் பியாஸ் 0 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் மறுபுறம் நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சையத் ஆசிசும் 20 (31) ரன்களில் அவுட்டானதால் மலேசியாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் மிடில் ஆர்டரில் விரன்தீப் சிங் நேரடியாக விளையாடி வெற்றிக்கு போராடிய நிலையில் எதிர்ப்புறம் விஜய் உன்னி 14 (21), சர்வின் முனியாண்டி 0, ஐநூல் ஹபிஸ் 14 (13) ரன்களில் அவுட்டாகி தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து மனம் தளராமல் அசத்திய விரன்திப் சிங் 3 பவுண்டரி 4 சிக்சருடன் 50 ரன்கள் கடந்து வெற்றிக்கு போராடியதால் வெற்றியின் நெருங்கிய மலேசியாவுக்கு கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் எதிர்ப்புறம் கை கொடுத்த பேட்ஸ்மேன் இல்லாத சூழ்நிலையில் அபிப் ஹொசைன் வீசிய முதல் 3 பந்துகளில் ரன்கள் எடுக்காத விரன்திப் சிங் 4வது பந்தில் அடித்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் 52 (39) ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: சேவாக், யுவிக்கு கேப்டன்ஷிப் கிடைக்கவே இல்ல.. 2023 உ.கோ வெற்றி கேரண்டி இல்ல – ரோஹித் அதிரடி

அடுத்த வந்த வீரர்கள் கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ஓவரில் 114/8 ரன்கள் மட்டுமே எடுத்த மலேசியா வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெறித்தனமாக போராடியும் பரிதாபமாக தோற்று வெளியேறியது. குறிப்பாக தங்களுடைய வரலாற்றில் இத்தொடரின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றால் அது மிகப்பெரிய சாதனையாக என்ற சூழ்நிலையில் தோல்வியை சந்தித்ததால் அந்த அணி வீரர்கள் மைதானத்தில் நொறுங்கி போனார்கள். மறுபுறம் அபிப் ஹொசைன், ரிப்பான் மொண்டல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்த அசத்தியதால் நூலிழையில் வென்ற வங்கதேசம் அக்டோபர் 6இல் நடைபெறும் செமி ஃபைனலில் இந்தியாவுடன் மோத தகுதி பெற்றது.

Advertisement