சேவாக், யுவிக்கு கேப்டன்ஷிப் கிடைக்கவே இல்ல.. 2023 உ.கோ வெற்றி கேரண்டி இல்ல – ரோஹித் அதிரடி

Rohit Sharma 3
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்வியை நிறுத்தும் லட்சியத்துடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது.

முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று அனுபவம் நிறைந்ததால் விராட் கோலிக்கு பின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் 2022 மற்றும் டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் இந்த உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளார் என்று சொல்லலாம்.

- Advertisement -

ரோஹித் கருத்து:
இருப்பினும் 2023 ஆசிய கோப்பை வென்ற புத்துணர்ச்சியுடன் இந்திய வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் தன்னம்பிக்கையுடன் இம்முறை ரோகித் சாதனை படைப்பார் என்று நம்பலாம். முன்னதாக 2011 உலகக்கோப்பையில் இடம் பிடிக்காத ரோஹித் சர்மா இன்று கேப்டனாக இந்தியாவை வழிநடத்தும் அளவுக்கு உழைப்பால் வந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

அதனால் யுவராஜ் சிங் போன்ற பலருக்கும் கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைக்காமல் போனதாக தெரிவிக்கும் அவர் இம்முறை 100% உலகக்கோப்பையை வெல்வோம் என்று சொல்லாமல் சாதிப்போம் என்று நம்புவதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 10 வருடங்களாக நாங்கள் ஐசிசி தொடர்களில் வெல்லவில்லை என்பது பரவாயில்லை. தற்போது 2019க்குப்பின் இங்கிலாந்து வெல்ல துவங்கியுள்ளனர்”

- Advertisement -

“வரலாற்றில் ஆஸ்திரேலியா மட்டுமே 2007க்குப்பின் 2015 உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலகக் கோப்பை உட்பட தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் வென்று வருகின்றனர். எனவே தற்போது இந்தியா வெல்லுமா என்பதை நான் எப்படி சொல்ல முடியும்? இருப்பினும் அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருப்பதால் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறேன். மேலும் இந்திய கிரிக்கெட்டில் இருந்த பல நட்சத்திரங்களுக்கு தகுதியாக இருந்தும் கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: போன 9 மாசமா அதை தொடவே இல்ல.. எல்லாம் ரித்திகா தான் பாத்துக்குறாங்க.. ரோஹித் பேட்டி

“குறிப்பாக நான் விராட் மற்றும் தோனி ஆகியோர் இருந்த வரை என்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போல சேவாக், கம்பீர் ஆகியோரும் இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திரங்கள். குறிப்பாக யுவராஜ் சிங் மேட்ச் வின்னராக இருந்தும் இந்தியாவுக்காக கேப்டன்ஷிப் செய்யும் வாய்ப்பை பெற்றதில்லை. அது தான் வாழ்க்கை. இப்போது எனக்கு கிடைத்துள்ள இந்த பதவிக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். அதில் ஒரு அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து எப்படி கேப்டனாக இருக்க வேண்டும் என்று தெரிந்தால் அதை நான் விரும்புவேன்” என்று கூறினார்.

Advertisement