போன 9 மாசமா அதை தொடவே இல்ல.. எல்லாம் ரித்திகா தான் பாத்துக்குறாங்க.. ரோஹித் பேட்டி

Rohit Sharma Rithika
- Advertisement -

இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறும் ஐசிசி 2023 உலகக்கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அந்த வெளிநாட்டு அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கேற்றார் போல் 2023 ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட காயத்தை சந்தித்த முக்கிய வீரர்கள் குணமடைந்து சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளது பலமாக மாறியுள்ளது. மேலும் சிராஜ், ஷமி, குல்தீப், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கில் உள்ளிட்ட அனைவருமே சிறந்த ஃபார்மில் இருப்பதால் ரசிகர்களிடம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் வெளிப்படை:
முன்னதாக 2023 உலகக் கோப்பையை வெல்வதற்கு முதலில் களத்தில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை தாண்டி செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், முக்கியமாக சமூக வலைதளங்களை கண்முன்னே கொண்டு வரும் மொபைல் ஃபோன்களை தொடாதீர்கள் என்று யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் ஆலோசனை தெரிவித்திருந்தனர். ஏனெனில் அது போன்றவற்றில் வரும் தேவையற்ற விமர்சனங்கள் கவனத்தை சிதறடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

மேலும் 2011 உலகக்கோப்பையில் கேப்டன் எம்எஸ் தோனி, சச்சின், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆகியோர் செய்தித்தாள்கள் முதல் மொபைல் போன் வரை அனைத்தையும் தவிர்க்குமாறு சொன்ன விதிமுறையை தாங்கள் பின்பற்றியது வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகவும் சேவாக், யுவராஜ் சிங் கூறியிருந்தார்கள். எனவே இம்முறை வெற்றி பெறுவதற்கு நீங்களும் அதை பின்பற்ற வேண்டுமென அவர்கள் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை கேட்டுக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 9 மாதங்களாக சமூக வலைதளங்களில் பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா விளம்பர தேவை ஏற்பட்டால் அதை தம்முடைய மனைவி ரித்திகா செய்வதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய மொபைல் போனில் கடந்த 9 மாதங்களாக ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் போன்றவற்றை நான் கொண்டிருக்கவில்லை”

இதையும் படிங்க: பும்ரா இல்ல.. 2 இந்தியர்கள் இருக்காங்க.. 2023 உ.கோ டாப் 4 பவுலர்களை பட்டியலிட்ட டு பிளேஸிஸ்

“ஒருவேளை விளம்பர தேவைக்காக ஏதேனும் பரிந்துரைகள் வந்தால் அதை என்னுடைய மனைவி பார்த்துக் கொள்கிறார். ஏனெனில் இவையெல்லாம் உங்களுடைய கவனத்தை சிதறடிக்க கூடியதாகும். இது உங்களுடைய எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்க கூடியதாகும். எனவே சமூக வலைதளங்களை என்னுடைய மொபைலில் வைத்திருக்கக் கூடாது என்று எடுத்து விட்டேன். ஒருவேளை அது இருந்தால் போட்டியை பார்க்காமல் அதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்.

Advertisement