பதவி விலகும் நாளுக்கு முன்னர் இந்திய அணி வீரர்களை அழைத்து மீட்டிங் போட்ட விராட் கோலி – நடந்தது என்ன?

Kohli
- Advertisement -

ஜனவரி 15-ஆம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். அவரது இந்த அறிவிப்பு பலரது மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி திடீரென இந்த முடிவை எடுத்தது அனைவரையும் வருத்தமடையச் செய்தது. 68 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி உள்ள அவர் 40 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளார்.

kohli

- Advertisement -

அது மட்டுமின்றி வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணியை அருமையாக வழிநடத்திய அவர் இப்படி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் பதவி விலகுவதை அறிவிப்பதற்கு முன்னர் இந்திய அணி வீரர்களை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தியதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தான் பதவி விலகும் முன்னர் இந்திய வீரர்களை அழைத்து விராட் கோலி அடுத்த அணியை எவ்வாறு முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதோடு அந்த உரையாடலுக்குப் பிறகு வீரர்கள் அனைவரிடமும் சிறிய வேண்டுகோள் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். அந்த வேண்டுகோள் யாதெனில் : நான் பதவி விலகுவதை அறிவிக்கும் முன்னர் நீங்கள் யாரும் வெளியில் சொல்ல வேண்டாம். மேலும் இந்த தகவலை எந்த ஒரு சமூகவலைத்தளம் வழியாகவும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Resign

அதன்பின்னரே முறைப்படி தனது சமூக வலைதள பக்கம் மூலமாக விராட்கோலி பதவி விலகலை உறுதி செய்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில் விராத் கோலி தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். அவரது பதவி விலகல் குறித்து வெளியான கடிதத்தில் சில முக்கிய விடயங்களை கோலி வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி பிசிசிஐ, ரவிசாஸ்திரி, மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : பிரதர் உண்மையிலே சொல்றேன். நீங்க ஒரு.. விராட் கோலியின் விலகல் குறித்து – முகமது ஆமீர் புகழாரம்

இந்த ஏழு வருட கேப்டன்சி பதவி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதோடு என்னுடைய வேலை முழு திருப்தியுடன் செய்துள்ளேன் என்றும் இந்திய அணிக்காக எப்போதும் எனது 120 சதவீத உழைப்பை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கடிதமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement