பிரதர் உண்மையிலே சொல்றேன். நீங்க ஒரு.. விராட் கோலியின் விலகல் குறித்து – முகமது ஆமீர் புகழாரம்

Amir
- Advertisement -

கடந்த சனிக்கிழமை அன்று மாலை திடீரென இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு பல்வேறு நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி சமூக வலைதளம் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில் கேப்டன் விராட் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அவரது இந்த விலகல் குறித்து பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வர தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் விராட்கோலி குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது :

- Advertisement -

நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல லீடர். இனி வரும் இளம் வீரர்களுக்கு நீங்கள் ஒரு உத்வேகமான முன்னுதாரணமான வீரராக இருக்கின்றீர்கள். நிச்சயம் தொடர்ந்து நீங்கள் களத்திலும், களத்திற்கு வெளியிலேயும் சிறப்பாக செயல்பட எனது வாழ்த்துக்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலியின் பதவி விலகல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் பேட்டிங்கில் இன்னும் தனது கவனத்தை அதிகரிக்கவே பதவியில் இருந்து விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்திய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் விராட் கோலி 68 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தி அதில் 40 வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார். அதுமட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது முதல் ஆசிய கேப்டனாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தினார். அதோடு அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டது என்று கூறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : சுனில் கவாஸ்கர் சொல்றது ரொம்ப கரெக்ட். இவரையே கேப்டனா போடுங்க – யுவ்ராஜ் சிங்கும் ஆதரவு

இந்திய மண்ணிலும் அவரது சாதனைகள் பிரமாதமான ஒன்று. 31 டெஸ்ட் போட்டிகளை இந்திய மண்ணில் அவர் கேப்டனாக விளையாடியுள்ளார். அதில் 24 வெற்றிகளை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட உள்ளது. அந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement