ரோஹித் கிடையாது.. கோலி தான் இந்தியாவை இரக்கமற்ற டெஸ்ட் அணியா மாத்துனாரு.. தெ.ஆ லெஜெண்ட் பாராட்டு

Ali Bacher
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 6வது சரிந்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

அந்த போட்டியில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் சராசரியான கேப்டன்ஷிப் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் வெளிநாடுகளில் இன்னும் தன்னை நிரூபிக்காத ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக தொடரை வென்று 5000+ ரன்களை குவித்து வெற்றிகரமாக செயல்பட்ட விராட் கோலி கேப்டனாக வரவேண்டும் என்று முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கேப்டன் கிங் கோலி:
இந்நிலையில் ஆஸ்திரேலியர்களை போல ஆக்ரோசமாக செயல்படக்கூடிய விராட் கோலி தான் இந்திய டெஸ்ட் அணியை இரக்கமற்றதாக மாற்றியதாக முன்னாள் தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் அலி பச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்போதைய இந்திய அணி தான் நான் பார்த்ததிலேயே சிறந்தது. ஏனெனில் முன்பெல்லாம் கபில் தேவ், ஸ்ரீநாத் போன்ற ஓரிரு நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இந்திய அணியில் இருந்தனர்”

“ஆனால் தற்போது அவர்களிடம் நிறைய பேர் இருக்கிறார்கள். வரலாற்றில் நீங்கள் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தால் உங்களால் அதிரடியாக செயல்பட முடியும். தற்போது உங்களிடம் சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேன் கேப்டனாக இருக்கிறார். உங்களிடம் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இருக்கிறார். சொல்லப்போனால் இந்த இந்திய அணியை விராட் கோலி தான் இரக்கமற்றதாக உருவாக்கியதாக நான் எப்போதும் கருதுகிறேன்”

- Advertisement -

“ஏனெனில் இந்திய அணியிடம் நீங்கள் எதையும் தேவையின்றி சொல்ல முடியாது. அவர்கள் நல்ல வீரர்கள். ஆனால் விராட் கோலி அப்படி கிடையாது. அவர் எனக்கு ஆஸ்திரேலியர்களை நினைவுபடுத்துகிறார். அவர் இந்த அணியில் போராடும் குணத்தை ஊசியால் ஏற்றியுள்ளார். அவருடைய ஆட்டத்திற்கு நான் ரசிகன். அவர் இன்றைய உலகில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இரண்டாவது போட்டிக்கு ரெடியான ஸ்டார் பிளேயர்.. வெளியேற்றப்பட இருக்கும் தமிழக வீரர் அஷ்வின் – விவரம் இதோ

அவர் கூறுவது போல 2014இல் தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்திய அணியை தம்முடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 முதல் 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த விராட் கோலி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் எதிரணிகள் மிரட்டினால் அதற்காக அஞ்சாமல் பதிலுக்கு போராடி திருப்பியடிக்கும் குணத்தை அவர் இந்திய அணியில் உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement