இரண்டாவது போட்டிக்கு ரெடியான ஸ்டார் பிளேயர்.. வெளியேற்றப்பட இருக்கும் தமிழக வீரர் அஷ்வின் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

தென்னாபிரிக்க மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரையே கைப்பற்றியதில்லை என்கிற குறையை போக்கி இம்முறை வரலாறு படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. ஆனால் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் :

இந்திய அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் அவர்கள் தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றனர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஜனவரி 3-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்ய வாய்ப்பு இருக்கும். ஒருவேளை டிரா ஆனாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ இந்திய அணி மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்க அணியிடம் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கழட்டிவிடப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு வலி காரணமாக ஜடேஜா இடம்பெறவில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரண்டாவது போட்டிக்கு முன்னதாக தனது காயத்தில் இருந்து மீண்ட ஜடேஜா தற்போது பயிற்சியிலும் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருவதால் அஸ்வினை வெளியேற்றும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : முழங்காலுக்கு கீழே வருது.. வெளிநாட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடதது ஏன்.. என்ற கேள்விக்கு ரோஹித் பதில்

ஏனெனில் தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் முற்றிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டிங் நன்றாக தெரிந்த ஒரு சுழற்பந்து வீச்சாளருடனே செல்லும் என்பதால் பேட்டிங்கில் கைகொடுக்கக்கூடிய ரவீந்திர ஜடேஜாவே இந்திய அணியின் முதன்மை தேர்வாக இருப்பார் எனவே இரண்டாவது போட்டியில் அஸ்வின் கழட்டிவிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement