முழங்காலுக்கு கீழே வருது.. வெளிநாட்டு பயிற்சி போட்டிகளில் விளையாடதது ஏன்.. என்ற கேள்விக்கு ரோஹித் பதில்

Rohit Sharma
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முஇன்னிங்ஸ் தல் போட்டியில் இந்தியா இன்னும் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் அணியாக நட்சத்திர முதன்மை வீரர்களை கொண்டிருந்தும் கொஞ்சம் கூட போராடாத இந்தியா மோசமான இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்திய ரசிகர்களின் கனவு மீண்டும் உடைந்து போனது. மேலும் இந்த படுதோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா தற்போது 6வது இடத்திற்கு சரிந்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

- Advertisement -

ரோஹித் பதில்:
முன்னதாக சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் சாதிக்க அங்கு முன்னதாகவே பயணித்து சில பயிற்சி போட்டிகளில் விளையாட தவறியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். மேலும் பயிற்சி போட்டியில் விளையாடாமல் உங்களுக்குள்ளேயே குழுவாக பிரிந்து இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் விளையாடினால் மட்டும் தென்னாபிரிக்காவில் வெல்ல முடியாது என அவர் இந்திய அணியை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் இப்போதெல்லாம் வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஏன் பயிற்சி போட்டியில் விளையாடுவதில்லை என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலளித்துள்ளது பின்வருமாறு. “நாங்கள் கடந்த 4 – 5 வருடங்களாக பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறோம். அதே சமயம் சில முதல் தர போட்டிகளிலும் விளையாட முயற்சிக்கிறோம். இருப்பினும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இருக்கக்கூடிய பிட்ச் உங்களுக்கு பயிற்சி போட்டிகளில் கிடைப்பதில்லை”

- Advertisement -

“எனவே எங்களுக்கு தேவையான சூழ்நிலைகளை நாங்கள் தயாரிப்பது சிறப்பாக இருக்கும். குறிப்பாக நாங்கள் விரும்பும் வகையில் பிட்ச்களை தயாரிக்கிறோம். சில மைதானங்களின் கட்டுப்பாட்டையும் நாங்கள் கொண்டுள்ளோம். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போதும் 2018இல் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய போதும் நாங்கள் பங்கேற்ற பயிற்சி போட்டிகளில் இருந்த பிட்ச்சில் பந்து முழங்காலுக்கு மேலே கூட வரவில்லை”

“ஆனால் இங்கே முதன்மையாக நடைபெறும் போட்டிகளின் பிட்ச்சில் பந்து தலைக்கு மேலே பறக்கிறது. எனவே அவற்றை கருத்தில் கொண்டு எங்களுடைய ஸ்டைலுக்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராக விரும்புகிறோம்” என்று கூறினார். அதாவது முதன்மை போட்டிகளில் இருக்கும் பிட்ச்களுக்கு கொஞ்சமும் சம்மந்தமின்றி பயிற்சி போட்டிகளின் பிட்ச் இருப்பதாலேயே அதில் விளையாடி என்ன பயன் என்று தவிர்த்து வருவதாக ரோகித் சர்மா கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement