வங்கதேச போட்டியில் ஜெயவர்தனேவை மிஞ்சி.. சச்சினின் உலக சாதனையை உடைக்க போகும் கிங் கோலி

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. அதில் தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளையும் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ள வங்கதேசம் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

மறுபுறம் தங்களுடைய முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்த இந்தியா வலுவான அணியாக கருதப்படுகிறது. அதனால் இந்த போட்டியிலும் சொந்த மண்ணில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கி 4வது வெற்றியை பதிவு செய்து இந்தியா தங்களுடைய வெற்றி பாதையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சாதனை படைப்பாரா:
மேலும் இந்த போட்டியில் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. ஏனெனில் முதல் போட்டியிலேயே 2/3 என இந்தியா சரிந்து தடுமாறிய போது வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அவர் 86 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அந்த வரிசையில் இந்த போட்டியில் குறைந்தபட்சம் 77 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 4வது வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் மகிளா ஜெயவர்த்தனே சாதனையும் தகர்த்து அவர் புதிய சாதனை படைப்பார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 34357
2. குமார் சங்கக்காரா : 28016
3. ரிக்கி பாண்டிங் : 27483
4. மகிளா ஜெயவர்த்தனே : 25297
5. விராட் கோலி : 25923*

- Advertisement -

அதை விட இதுவரை 566 இன்னிங்ஸில் 25923 ரன்களை எடுத்துள்ள விராட் கோலி இன்னும் 77 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைப்பார். ஒருவேளை இன்றைய போட்டியில் தவறினால் கூட அடுத்த 34 இன்னிங்ஸில் 77 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்த உலக சாதனையை விராட் கோலி படைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

இதையும் படிங்க: ஆப்கனிஸ்தான் அணிக்கெதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு அவரோட சிறப்பான ஆட்டம் தன காரணம் – டாம் லேதம் பேட்டி

இதற்கு முன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 600 இன்னிங்ஸில் 26000 ரன்கள் குவித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கரின் நிறைய சாதனைகளை வரிசையாக உடைத்து வரும் விராட் கோலி இந்த சாதனையையும் எளிதாக உடைப்பார் என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement