ஆப்கனிஸ்தான் அணிக்கெதிராக நாங்கள் பெற்ற வெற்றிக்கு அவரோட சிறப்பான ஆட்டம் தன காரணம் – டாம் லேதம் பேட்டி

Tom-Latham
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 71 ரன்களையும், டாம் லேதம் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே துவங்கினோம். ஆனாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சரியான நேரத்தில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை அழுத்தத்திற்கு கொண்டு வந்தனர்.

- Advertisement -

அந்த நேரத்தில் நாங்கள் மீண்டும் சரியான பார்ட்னர்ஷிப்பை அமைத்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்தோம். அந்த வகையில் கிளென் பிலிப்ஸ் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் தான் எங்களது அணியின் ரன் குவிப்பை மீண்டும் பெரிய கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதேபோன்று பந்து வீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறோம். முதல் பத்து ஓவர்களில் எங்களது பந்துவீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்து வீசினர்.

இதையும் படிங்க : போற போக்கை பாத்தா.. ஃபைனலில் இந்தியாவுடன் அவங்க தான் மோதுவாங்க போல.. ஆகாஷ் சோப்ரா

மிட்சல் சான்ட்னர் தனது வேலையை தற்போது சிறப்பாக செய்து வருகிறார். அவர் ஒரு ஆல் ரவுண்டராக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இனியும் நல்ல ஆட்டங்கள் அவரிடம் இருந்து வரும் என்று நினைக்கிறேன். இதற்கு அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறோம். எதிர்வரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம் என டாம் லேதம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement